கரோனா வைரஸ்

சிறாருக்கான கோவாவாக்ஸ் தடுப்பூசி இந்திய சந்தையில் கிடைக்கிறது

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மகாராஷ்டிராவின் புணே நகரில் அமைந்துள்ள சீரம் நிறுவனத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த நிறுவனம் சார்பில் தற்போது 12 வயது முதல் 17 வயது வரையிலான சிறாருக்காக கோவாவாக்ஸ் கரோனா தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. இந்த தடுப்பூசிக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி வழங்கியது.

இதுகுறித்து சீரம் நிறுவன தலைவர் அதார் பொன்னவாலா ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: இந்திய சந்தையில் சிறாருக்கான கோவாவாக்ஸ் கரோனா தடுப்பூசி விற்பனைக்கு கிடைக்கிறது. உள்நாட்டில் தயாரிக்கும் இந்த தடுப்பூசி மட்டுமே ஐரோப்பிய நாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின் அடிபபடையில் கோவாவாக்ஸ் தடுப்பூசி உருவாகி உள்ளது. இது 90 சதவீதம் செயல்திறன் கொண்டதாகும். இந்த தடுப்பூசி நமது குழந்தைகளை பாதுகாக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனையில் சிறாருக்கான கோவாவாக்ஸ் கரோனா தடுப்பூசி ரூ.900 விலையில் கிடைக்கிறது. மேலும் தடுப்பூசி செலுத்த சேவை கட்டணமாக ரூ.150 வசூலிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT