கரோனா வைரஸ்

தீவிர கரோனா நோயாளிகளுக்கான மாத்திரை: உலக சுகாதார நிறுவனம் அனுமதி

செய்திப்பிரிவு

ஜெனிவா: தீவிர கரோனா நோயாளிகளுக்கு வழங்குவதற்காக பைசர் நிறுவனம் தயாரித்த மாத்திரைக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

தீவிர கரோனா தொற்று உள்ளவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அளிப்பதற்காக சைபர் நிறுவனம் கரோனா மாத்திரை அறிமுகம் செய்தது. இந்த மாத்திரை 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி "பாக்ஸ்லோவிட்” என்ற மாத்திரைக்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. தீவிர கரோனா தொற்று உள்ளவர்கள், தடுப்பூசி செலுத்தாதாவர்கள், வயதானவர்கள் ஆகியோருக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாக்ஸ்லோவிட் மாத்திரையில் நிர்மாட்ரெல்விர், ரிடோனாவிர் ஆகிய மருந்துகள் உள்ளன. இதில் நிர்மாட்ரெல்விர் மருந்து கரோனா வைரஸ் தனது புரதத்தை பிரதி எடுக்கவிடாமல் தடுக்கும். நிர்மாட்ரெல்விர் மாத்திரை புரதத்தைத் தடுத்து நிறுத்தியதை நீண்ட நாட்களுக்குச் செயல்பட வைக்கும்.

பாக்ஸ்லோவிட் மாத்திரை என்பது 2 நிர்மாட்ரெல்விர், ஒரு ரிடோனாவிர் மாத்திரையாகும். இந்த மாத்திரையை 5 நாட்களுக்கு காலை, மாலை இருவேளையும் தொடர்ந்து சாப்பிட வேண்டும். 5 நாட்களுக்கு மேல் மருத்துவரின் ஆலோசனையில்லாமல் எடுக்கக் கூடாது. இதற்கு முன்பாக 12 வயது மற்றும் அதற்கு மேல் வயதுள்ள பிரிவினருக்கு வழங்க அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு நிர்வாகம் அனுமதியளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT