இத்தாலி நாட்டின் மிலன் நகரில் உள்ள ஷான் ரஃபேல் மருத்துவமனையின் தலைவர் ஆல்பர்ட்டோ ஸாங்ரில்லோ சமீபத்தில் நாவல் கரோனா வைரஸ் தன்னுடைய சக்தியையும் தீவிரத்தையும் இழந்து விட்டது என்றார். ஆனால் இவரது இந்தக் கூற்றை நிபுணர்கள் பலரும் மறுத்துள்ளனர்.
இத்தாலி மருத்துவர் ஸாங்ரில்லோ கூறும்போது முதல் ஒன்றிரண்டு மாதங்களை ஒப்பிடும் போது கடந்த 10 நாட்களாக வைரஸ் சுமை குறைந்துள்ளது என்றார், “கிளினிக்கலாக இந்த வைரஸ் இப்போது இல்லை என்றே கூற வேண்டும்” என்றார்.
ஆனால் இதனை தொற்றுநோய் நிபுணர்கள் பலரும் மறுத்து, இத்தாலியின் கிளினிக்கல் கண்டுப்பிடிப்புகளை வைத்துப் பார்க்கும் போது வைரஸ் சுமை குறைந்ததாகத் தெரியவில்லை. அதாவது அதன் மனிதத் தொற்றுத் தன்மை , தீவிரம் குறைந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்று மறுத்துள்ளனர்.
மரியா வான் கெர்கோவ் என்ற உலகச் சுகாதார அமைப்பின் நிபுணர் கூறும்போது “ஒருவருக்கு ஒருவர் தொற்றும் தன்மையில் தீவிரம் குறைந்ததாகத் தெரியவில்லை” என்றார்.
கரோனா இன்னமும் சூப்பர் ஸ்ப்ரெடர் என்ற அதிதீவிர பரவல் தன்மை கொண்டதகாவே உள்ளது. தொற்று ஏற்பட்டவர்களில் 20% பேருக்கு தீவிர நோயை ஏற்படுத்துவதாகத்தான் உள்ளது.
பிட்ஸ்பர்க் பல்கலைக் கழக ஆய்வாளர் வான் கூப்பர் வாஷிங்டன் போஸ்ட்டில் கூறும்போது, இன்ப்ளூயன்சாவை ஒப்பிடும் போது மெதுவாகவே மாற்றமடைகிறது. இதன் மரபணு ரீதியான மாற்றங்கள் ஏறக்குறைய எந்த வித விளைவையும் ஏற்படுத்துவதாக இல்லை. இத்தாலி மருத்துவர்களின் வேறு பட்ட கருத்துக்களுக்குக் காரணம் சிகிச்சையில் ஏற்பட்ட மாற்றம்தானே தவிர வைரஸில் ஏற்பட்ட மாற்றமாகக் கருத முடியாது.
வைரஸ் வரலாற்றை எடுத்து பார்த்தோமானால் மெதுவாகவே பரிணாமம் அடையும் முந்தைய 4 கரோனா வைரஸ்கள் போலவே இதுவும் ஆபத்து நீங்கியதாக, குறைவானதாக மாறிவிடும், ஆனால் இதற்கான ஆதாரங்கள் இல்லை, கோட்பாட்டளவில் உள்ளது.
கலிபோர்னியா பல்கலைக் கழக தொற்று நோய் நிபுணர் ஆண்ட்ரூ நோய்மர் கூறும்போது, ‘வைரஸ் இன்னும் செயல்தன்மையை இழக்கவில்லை. செயல்தன்மையை இழக்க ஆண்டுகள் பிடிக்கும் என்று நினைக்கிறேன்’ என்றார்.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தொற்று நோய் நிபுணர் கெய்ட்லின் ரிவர்ஸ் கூறும்போது, முதலில் மருத்துவமனை போன்ற நிறுவனத்தில் தோன்றும் வைரஸ் பிறகு சமூகப் பரவலாக விரிவடையும். அது அங்கு உள்ளது நமக்கு அதற்கு சம்பந்தமில்லை என்று கூற முடியாது. இது உண்மையல்ல.
கடந்த மார்ச் முதலே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் வைரஸ் சுமை குறையவில்லை என்பதைத்தான் பார்த்து வருகிறோம் நியூயார்க் நகரில் வைரஸில் எந்த வித மரபணு மாற்றங்களையும் நாங்கள் பார்க்கவில்லை என்று மவுண்ட் சினாய் மருத்துவப் பள்ளி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.