கரோனா வைரஸ் எனும் கோவிட்-19 அறிகுறிகளுடன் அயல்நாட்டிலிருந்து திரும்பிய நபர் ஒருவர் பரிசோதனைக்கு டிமிக்கி கொடுத்தார், இதனால் அவரைச் சேர்ந்ந்த 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக மத்தியப் பிரதேச அதிகாரிகள் தெரிவித்தனர், இதனையடுத்து இந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இவருடன் தொடர்புடைய குடும்பத்தினர் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதோடு இவரது ஊழியர்கல் 22 பேர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதில் 8 பேர்களுக்கு தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதாக ம.பி. அதிகாரிகள் தெரிவித்தனர்.
அயல்நாட்டிலிருந்து திரும்பிய இந்த நபர் பரிசோதனையிலிருந்து தப்பித்தார், ஆனால் இவருக்கு கரோனா வைரஸ் இருப்பது பிற்பாடு உறுதி செய்யப்பட்டது.
இவரது குடும்பத்தினர் இருவருக்கு வெள்ளியன்று கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டது, இவரது ஊழியர்கள் 8 பேருக்கும் தொற்று இருப்பதாக தற்போது அஞ்சப்படுகிறது.
இந்த நபர் துபாயிலிருந்து மார்ச் 16ம் தேடி திரும்பினார், ஆனால் டெஸ்ட்டுக்கு டிமிக்கி கொடுத்தார். மேலும் வீட்டில் தன்னை தனிமைப் படுத்திக் கொள்ளவும் இல்லை. அயல்நாட்டிலிருந்து வருபவர்கள் தாங்களாகவே பரிசோதனைக்கு தங்களை அறிவித்துக் கொள்வதோடு 14 நாட்கள் தனிமைப்பட வேண்டும் என்று அரசாங்க ஆணை கூறுகிறது,
வெள்ளியன்று மத்தியப் பிரதேசத்தில் வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட 4 பேர்களில் இவரும் இவரது குடும்பத்தினர் ஒருவரும் அடங்குவார்கள்.
இவரது கடையில் வேலைப்பார்த்த 22 நபர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர், இதில் 8 ஊழியர்களுக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த 8 பேரின் சோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.
இதனையடுத்து பொறுப்பற்ற முறையில் அலட்சியமாக நடந்த இவர் மீது ஐபிசி சட்டப்பிரிவுகள் பாய்ந்துள்ளன.
இவருடன் இன்னும் யார்யாரெல்லாம் நேரடி தொடர்பிருந்தார்கள் என்ற விவரங்களையும் நிர்வாகம் தடம் கண்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதற்கிடையே மாவட்ட அதிகாரி அனைத்து சந்தைகளையும் மூட உத்தரவிட்டதோடு, பேருந்து போக்குவரத்து உட்பட பல போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளன.