மார்ச் 21-ம் தேதி நண்பகல் 12.02 நிலவரப்படி இந்தியாவில் கோவிட்-19 என்கிற கரோனாவுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 285 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை, ஞாயிறன்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது, காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம், பஸ்கள், ரயில்கள் ஓடாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.
இன்று காலை 9 மணிக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் கரோனா தொற்று 285 பேர்களை பாதித்துள்ளது. 22 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் இதுவரை இறந்துள்லனர், 231 பேர்களுக்கு கரோனா தொற்று சிகிச்சை நடைபெற்று வருகிறது.
உறுதி செய்யப்பட்ட கோவிட்-19 நோயாளிகளில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர் என்கிறது மத்திய அரசு.
இமாச்சலப் பிரதேசம் முதல் கரோனா தொற்றை உறுதி செய்துள்ளது மகாராஷ்ட்ர மாநிலம் அதிகபட்சமாக 52 கரோனா தொற்று நோயாளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
கேரளா 2ம் இடத்தில் 40 கரோனா தொற்று நோயாளிகளைக் கொண்டுள்ளது.
டெல்லியில் 26 பேருக்கும் உத்தரப்பிரதேசத்தில் 24 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதோடு சுமார் 14,59,993 பயணிகள் விமான நிலையத்தில் ஸ்க்ரீன் செய்யப்பட்டுள்ளனர் என்று மத்தியச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.