கரோனா வைரஸ்

பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பாதிப்பு 33 ஆக அதிகரிப்பு

ஐஏஎன்எஸ்

பாகிஸ்தானில் புதிதாக 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து அங்கு பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.

சனிக்கிழமையன்று பலுசிஸ்தானில் 2 பேருக்கும், கராச்சியில் 2 பேருக்கும் இஸ்லாமாபாதில் ஒருவருக்கும் கரோனா இருப்பது தெரியவந்துள்ளது, என்று தி எக்ஸ்பிரஸ் ட்ரைபூன் பத்திரிக்கைக் கூறுகிறது.

அமெரிக்காவிலிருந்து சமீபத்தில் பாகிஸ்தான் வந்த பெண்ணுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வெண்ட்டிலேட்டரில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கராச்சியில் இருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதையடுத்து சிந்து மாகாணத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT