அமிதாப் பச்சன் 
கரோனா வைரஸ்

கரோனா வைரஸ்: ரசிகர்களுடனான ஞாயிற்றுக்கிழமை சந்திப்பை ரத்து செய்த அமிதாப் பச்சன்

பிடிஐ

கரோனா வைரஸ் பரவல் குறித்த அச்சமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நடவடிக்கைகளும் மக்களிடையே பரவிவரும் வேளையில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனது ரசிகர்களுடனான வாராந்திர சந்திப்பை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ரத்து செய்துள்ளார். அதேநேரம் அவர்கள் நலமுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது ரசிகர்களுடனான வாரந்திர சந்திப்பை ரத்து செய்துள்ளார். கடந்த 37 ஆண்டுகளாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஜுஹுவில் உள்ள தனது ஜல்சா இல்லத்தில் தனது ரசிகர்களை மகிழ்ச்சியோடு சந்தித்துப் பேசுவது வழக்கம். ஆனால் இந்த ஞாயிறு அவ்வாறு வரவேண்டாம் என ரசிகர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

"அனைத்து ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கும் ஒரு வேண்டுகோள்! தயவுசெய்து இன்று ஜல்சா வாயிலுக்கு வர வேண்டாம்... ஞாயிற்றுக்கிழமை சந்திப்பு முன்னிட்டு (நான்) வரப்போவதில்லை!

கோவிட் 19 நோய்த் தொற்று உலகம் முழுவதும் 5000 பேரின் இறப்புகளுக்கு வழிவகுத்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள் ... பாதுகாப்பாக இருங்கள்"

இவ்வாறு அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT