கரோனா வைரஸ்

கரோனா வைரஸுக்கு எதிராக உறுதியாகப் போராடுவோம்: விராட் கோலி

செய்திப்பிரிவு

கரோனா வைரஸுக்கு எதிராக அனைத்துத் தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டு உறுதியாகப் போராடுவோம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், “கோவிட்-19 காய்ச்சல் பரவலுக்கு எதிராக அனைத்துத் தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து உறுதியாகப் போராடுவோம்.

பாதுகாப்பாக இருங்கள். வருமுன் காப்பதே சிறந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அனைவரும் கவனமாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

கோலி மட்டுமல்லாது கே.எல். ராகுலும் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவில் இதுவரை கோவிட்-19 காய்ச்சலுக்கு இந்தியாவில் 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், உலகம் முழுவதும் கோவிட் -19 காய்ச்சலுக்கு 1,40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,000 பேர் வரை பலியாகியுள்ளனர்.

சீனாவில் கோவிட் -19 காய்ச்சல் பாதிப்புக்கு இதுவரை 3,189 பேர் பலியாகியுள்ளனர். 80,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவிலிருந்து பரவிய கோவிட் -19 காய்ச்சல் உலகம் முழுவதும் 112 நாடுகளில் பரவியுள்ளது.

SCROLL FOR NEXT