மாஸ்க் உற்பத்தித் தொழிற்சாலை | பிரதிநிதித்துவப் படம் 
கரோனா வைரஸ்

கரோனா வைரஸ்: பற்றாக்குறையைப் போக்க நாள் ஒன்றுக்கு 5 லட்சம் மாஸ்க் உற்பத்தி: சீனாவில் பிரம்மாண்ட தொழிற்சாலை

பிடிஐ

உலகைய பாதித்துவரும் கரோனா வைரஸ் காரணமாக முகக்கலவசப் பயன்பாட்டுக்கு மிகப்பெரிய தேவை ஏற்பட்டுள்ள நிலையில் பற்றாக்குறையைப் போக்கும் வண்ணம் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் முகக்கவசங்களைத் தயாரிக்கும் பிரமாண்ட் மாஸ்க் உற்பத்தி தொழிற்சாலையை பிஒய்டி நிறுவனம் சீனாவில் தொடங்கவுள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸால் அந்நாட்டில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். சீனா மட்டுமல்லாமல் தென் கொரியா, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி, இந்தியா உள்ளிட்ட 119 நாடுகளிலும் கோவிட்-19 வைரஸ் பரவியுள்ளது.

இதனால் கடந்த ஓரிரு மாதங்களில் ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்குப் பரவியுள்ள இந்நோய் இதுவரை 4500க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். சீனாவில் மட்டுமே கோவிட் -19 காய்ச்சல் பாதிப்புக்கு இதுவரை 3,136 பேர் பலியாகியுள்ளனர். அங்கு 80,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட் 19 காய்ச்சலைத் தடுக்க பல்வேறு ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள நிலையில் அதன் விதிகளை உலகம் முழுவதும் தற்போது பின்பற்றி வருகின்றனர். கரோனா வைரஸைத் தடுக்க முகக்கவசமும் முக்கியமான அம்சமாக பரிந்துரைக்கப்பட்டு வருவதால் இன்று அதற்கு மிகப்பெரிய பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு உலகிலேயே மிகப்பெரிய அளவில் சீனாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் பிஒய்டி நிறுவனம் தேவையான அளவுக்கு மக்களுக்கு முகக்கவசங்களை வழங்குவதற்கு ஏற்ற வகையில் தொழிற்சாலை ஒன்றை மிகப்பெரிய அளவில் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பிஒய்டி நிறுவனம் கூறியுள்ளதாவது:

லட்சக்கணக்கில் முகக்கவசம் உற்பத்தி செய்வதற்கான உலகின் மிகப்பெரிய ஆலையை உருவாக்கியுள்ளதற்காக பிஒய்டி பெருமிதம் கொள்கிறது. இந்த ஆலை ஒரு நாளைக்கு 50 லட்சம் முகக்கவசங்கள் மற்றும் மூன்று லட்சம் பாட்டில்கள் கிருமிநாசினிகளை உற்பத்தி செய்வதற்கான முழு திறனில் இப்போது இயங்கிவருகிறது.

சீனா முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஏஜென்சிகசிகளிடம் மாஸ்க் பற்றாக்குறை ஏற்பட்டு கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கடுமையான பற்றாக்குறையை போக்க இந்த ஆலை லட்சக்கணக்கில் உற்பத்தி செய்து வழங்கும்.

பிஒய்டி தலைவரான வாங் சுவான்ஃபு பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்களைக் கொண்ட ஒரு சிறப்பு பணிக்குழுவை இதற்காக நியமித்துள்ளார்.

சீனாவில் தொடங்கப்படும் புதிய பிரமாண்ட மாஸ்க் உற்பத்தித் தொழிற்சாலைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வடிவமைப்பு ஆகியவற்றில் 3,000 க்கும் மேற்பட்ட பொறியியலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நிறுவனம் தினசரி அடிப்படையில் ஐந்து முதல் 10 புதிய முகக்கவசம் தயாரிக்கும் இயந்திரங்களை உருவாக்குவதால், பிஒய்டியினால் தயாரிக்கப்படும் முகக்கவசங்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு சுமார் மூன்று லட்சம் யூனிட்டுகளிலிருந்து ஐந்து லட்சம் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.

பிஒய்டி தற்போது ஒரு நாளைக்கு மொத்தம் 50 லட்சம் முகக்கவசங்களை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. விரைவில் இதன் உற்பத்தியினால் பற்றாக்குறை நீங்கி தாராளமாக முகக்கவசம் கிடைக்கும்வகையில் மக்கள் பயனடைவார்கள்.

இவ்வாறு பிஒய்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT