நாவல் கரோனா வைரஸ் எனும் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு போலந்தில் முதல் நபர் உயிரிழந்துள்லதாக அந்நாட்டின் மேற்கு நகரமான போஸ்னானின் உதவி மேயர் வியாழனன்று தெரிவித்தார்.
57 வயதான இந்த ஆசிரியை சமீபத்தில் நிமோனியா காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் செயற்கை கோமாவில் வைக்கப்பட்டு வெண்டிலேட்டரில் இருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிரிந்தது என்று போஸ்னான் உதவி மேயர் தெரிவித்துள்ளார்.
போலந்தில் மேலும் 46 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண், கணவர், மகள் ஆகியோர் மருத்துவமனையில் இன்று கரோனாவுக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 2 மகன்களுக்கு நோய் தொற்று இல்லை.
இது தொடர்பாக போலந்து அதிபர் ஆந்த்ரேய் டூடா செய்தியாளர்களிடம் அச்சம் தெரிவித்த போது, “எதைக் கண்டு கடந்த சில நாட்களாக அஞ்சினோமோ அது நடந்து விட்டது. நம் நாட்டில் கரோனாவுக்கு முதல் நபர் உயிரைப் பறிகொடுத்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.