உலக சினிமா

கோவா பட விழாவில் ஏஐ குறும்படத்துக்கு விருது!

செய்திப்பிரிவு

சினிமா பேக்டரி அகாடமி சார்பில் அதன் நிர்வாக இயக்குநர் ராஜேஷ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம், ‘தி லாஸ்ட் பேக்கப்’. முழுவதும் ஏஐ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, திரைப்பட மாணவி ஸ்ரீரிதன்யா இதை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் 3030-ம் ஆண்டில் எதிர்கால சென்னையை மையமாகக் கொண்ட அறிவியல் புனை கதை.

அனைத்தையும் தொழில்நுட்பம் ஆட்சி செய்யும் உலகிலும், மனித உணர்வுகள் என்றும் அழியாது என்ற உணர்ச்சியை உருக்கமாக வெளிப்படுத்தும் இக்குறும்படம், கோவா திரைப்பட விழாவில், சர்வதேச போட்டிப் பிரிவில் பங்கேற்றது.

இந்த வருடம் முதன்முறையாக ஏஐ திரைப்படங்களுக்கான விருது, இப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த விருதை இக்குறும்படம் பெற்று சாதனைப் படைத்தது. இவ்விருதைப் பிரபல இயக்குநர் சேகர் கபூர், ஸ்ரீரிதன்யாவுக்கு வழங்கினார்.

SCROLL FOR NEXT