உலக சினிமா

கோவா திரைப்பட விழா​வில் ‘ஆக்காட்​டி’க்கு அங்​கீ​காரம்

செய்திப்பிரிவு

கோவா சர்​வ​தேச திரைப்பட விழா​வில், ‘வேவ்ஸ் ஃபிலிம் பஜார்’ பிரி​வில், சிறந்த திரைப்பட அடை​யாள விருதை ‘ஆக்​காட்​டி’ திரைப்படம் பெற்​றுள்​ளது. படத்​தின் இயக்​குநர் ஜெய் லட்​சுமி, இணைத் தயாரிப்​பாளர் சுனில் குமார், ஒலி வடிவ​மைப்​பாளர் ஹரி பிர​சாத், காஸ்​டிங் இயக்​குநர் சுகு​மார் சண்​முகம் ஆகியோர் விழா​வில் கலந்து கொண்டு விருதைப் பெற்​றனர்.

தென் தமிழக கிராமப்​புறங்​களில் நில​வும் தாய்​மாமன் சீர் வரிசை முறையை மைய​மாகக் கொண்டு உரு​வாக்​கப்​பட்ட இப்​படம், சமு​தாய மரபு​கள் உரு​வாக்​கும் நெருக்​கடிகளை​யும், அதனால் மனித மன​தில் எழும் சிக்​கல்​களை​யும் மென்​மை​யான உணர்​வு​களை​யும் பதிவு செய்​கிறது. இதில் ஆண்​டனி, முல்​லை​யரசி, சிறு​வன் சுபாஷ் நடித்​துள்​ளனர்.

இசக்கி ராஜா ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு தீபன் சக்​ர​வர்த்​தி இசையமைத்​துள்​ளார்​. மேலும்​ பல சர்​வ​தேச திரைப்​பட விழாக்​களுக்​கு அனுப்​பப்​பட்​டுள்​ள இப்​படத்​தின்​ முதல்​ ​பார்​வை விரைவில் வெளியாக இருக்கிறது.

SCROLL FOR NEXT