உலக சினிமா

ஆதிபுருஷ் ரிலீஸ் - படக்குழு மீண்டும் உறுதி

செய்திப்பிரிவு

பிரபாஸ் ராமராக நடிக்கும் படம், ‘ஆதிபுருஷ்’. சைஃப் அலிகான் ராவணனாகவும் கீர்த்தி சனோன் சீதையாகவும் நடிக்கின்றனர். ஓம் ராவுத் இயக்குகிறார். 3டி தொழில் நுட்பத்தில் உருவாகிறது. சில மாதங்களுக்கு முன் வெளியான இதன் டீசரில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகளுக்கு, கடும் விமர்சனம் எழுந்தது. இதனால், சில காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டு, கிராபிக்ஸ் காட்சிகள் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படம் இந்த மாதம் 12-ம் தேதி வெளியாவதாக இருந்தது. பின்னர், ஜூன் 16 வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், படம் வெளியாக இன்னும் 150 நாள்களே உள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரிலீஸ் தேதியை அவர் உறுதி செய்துள்ளார்.

SCROLL FOR NEXT