தமிழ் சினிமா

மார்ச் 19-ல் வெளியாகிறது ‘யூத்’

ஸ்டார்க்கர்

மார்ச் 19-ம் தேதி ‘யூத்’ படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘யூத்’. இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது மார்ச் 19-ம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ட்ரெய்லர் வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது.

‘யூத்’ படத்தின் தமிழக உரிமை, ஓடிடி உரிமை, இசை உரிமை மற்றும் தொலைக்காட்சி உரிமை என அனைத்துமே விற்று படக்குழுவினருக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கிறது. மேலும், படத்துக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் படமும் வசூல் சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.

தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சுரமுடு, அனிஷ்மா உள்ளிட்ட பலர் கென் கருணாஸ் உடன் நடித்துள்ளனர். இதற்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் வெளியிடப்பட்ட ‘முட்டை கலக்கி’ பாடல் இணையத்தை ஆட்கொண்டது உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT