தமிழ் சினிமா

‘சிங்காரம்’ படத்தில் உரிமைக்காகப் போராடும் யோகி பாபு

நிலா

யோகி பாபு கதை​யின் நாயக​னாக நடித்​துள்ள திரைப்​படம்​,‘சிங்​காரம்’. ‘ராஜவம்​சம்’ படத்தை இயக்​கிய கே.​வி.கதிர்​வேலு இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்​கு சாம் சி.எஸ். இசை அமைத்​துள்​ளார். ராக் புரொடக் ஷன் நிறு​வனத்​தின் சார்​பில் ஏ.எஸ்​.ரமண பாலாஜி மற்​றும் பத்​மாவதி காந்தி இணைந்து தயாரித்​துள்ள இப்​படத்​தில், வேல ராமமூர்த்​தி, எம்​.எஸ்​.​பாஸ்​கர், மரியா வின்​சென்ட், சாம்​ஸ், ஆர்த்தி கணேஷ் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். பிரசன்னா எஸ். குமார் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். இப்​படம் அக். 30-ல் வெளி​யாகும் என படக்​குழு அறி​வித்​துள்​ளது.

“தனது உரிமை​யை​யும் சுயமரி​யாதையை​யும் நிலை ​நாட்​டப் போராடும் ஒரு மனிதனின் பயணத்​தை, நகைச்​சுவை​யும் உணர்​வுப்​பூர்​வ​மான தருணங்​களும் இணைந்த திரைக்​கதை​யின் வழி​யாக இதில் சொல்​கிறோம். அன்​றாட வாழ்க்​கை​யில் எதிர்​கொள்​ளும் பிரச்​சினை​களை​யும் அவற்​றைக் கடந்து முன்​னேறு​வதற்​கான மன உறு​தி​யை​யும் மையப்​படுத்​தி, பொழுது​போக்​குடன் கூடிய கருத்தை இப்​படம் சொல்​லும். இதில் நரிக்​குறவர் சமு​தா​யத்​தைச் சேர்ந்​தவ​ராக யோகி​பாபு நடித்​துள்​ளார்” என்று படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT