தமிழ் சினிமா

லைவ் சவுண்​டில் படமான ‘ஏன் என்னை ஏதோ செய்​தாய்’

நிலா

ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம்​,‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’.

இதில் மது​மிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், ஆலம் ஷா, நவ்யா சுஜி, மாதங்கி சதீஷ், ரியா மனோஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். பியட்ரோ வில்லானி ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களுக்கு ஜெய்கார் ஹரிநாத், அசோக் ஸ்ரீதரன் இசையமைத்துள்ளனர். பின்​னணி இசையை ஜோயி ரிடா அமைத்துள்ளார்.

“தாயை இழந்து தனிமையில் வளர்ந்த இளைஞன், மதுவுக்கு அடிமையாகி வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில், ஒரு காதல் அவனது வாழ்க்கையில் நுழைகிறது. அது அவனை எப்படி முழுமையாக மாற்றி, வெளிச்சம் நோக்கி அழைத்துச் செல்கிறது என்பதே படத்தின் மையக் கரு.

முழுப் படமும் லைவ் சவுண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக் ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதன் டீஸர் வெளியாகியுள்ளது. ஆக.21-ல் வெளியிட திட்டமிட்டுள்ளோம்​” என்​றது படக்குழு.

SCROLL FOR NEXT