தமிழ் சினிமா

’கில்லி’ ரீ-ரிலீஸ் வசூலை முறியடிக்குமா ‘படையப்பா’?

ஸ்டார்க்கர்

‘கில்லி’ ரீ-ரிலீஸ் படத்தின் வசூலை ‘படையப்பா’ முறியடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபமாக பல்வேறு வெற்றியடைந்த படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டு வருகின்றன. இதில் விஜய் நடித்த ‘கில்லி’ மறுவெளியீடு செய்யப்பட்டு மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் மறுவெளியீட்டில் 10 கோடி வரை வசூல் செய்து சாதனை புரிந்தது. இதனை வேறு எந்தவொரு படமும் முறியடிக்கவில்லை.

இதனிடையே ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘படையப்பா’ படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதற்கு ரஜினி வீடியோ பேட்டி எல்லாம் அளித்து விளம்பரப்படுத்தினார். அதில் ’படையப்பா’ படம் குறித்து பேசிய விஷயங்கள் அனைத்துமே இணையத்தில் ட்ரெண்டானது. மேலும், டிசம்பர் 12-ம் தேதி அறிவித்தபடி சில படங்கள் வெளியாகவில்லை. இதனால் முக்கிய திரையரங்குகள் அனைத்திலுமே ‘படையப்பா’ திரையிடப்பட்டது.

இதனால் ‘படையப்பா’ படம் வெளியான 3 நாட்களில் சுமார் ரூ.4 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. மேலும், அதிகாரபூர்வ வசூல் நிலவரம் இன்னும் வெளியாகவில்லை. இந்த வசூலை முன்வைத்து படம் திரையிட்டு முடியும்போது ‘கில்லி’ வசூலை முறியடிக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

ஏனென்றால் தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது ‘படையப்பா’. மேலும் மக்களிடையே கிடைத்த வரவேற்பினால் நாளுக்கு நாள் திரையரங்குகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

SCROLL FOR NEXT