தமிழ் சினிமா

தமிழில் ஏன் இடைவெளி? - ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி

செய்திப்பிரிவு

ஐஸ்​வர்யா ராஜேஷ், நீண்ட இடைவெளிக்​குப் பிறகு தமிழில் நடிக்கும் படம், ‘அண்​டர் 18’. எஸ்​ஆர் புரொடக் ஷன்ஸ் சார்​பில் பி.ஜகதீஷ் தயாரிக்​கும் இப்​படத்​தில் கிச்சா சுதீப், விக்​ராந்த், கிஷோர், சேத்​தன் உள்பட பலர் நடிக்​கின்​றனர். இதில் முதன்மை பாத்​திரத்​தில் நடிக்​கும் ஐஸ்​வர்யா ராஜேஷிடம் பேசினோம்.

‘அண்​டர் 18’ என்ன மாதிரி​யான கதை?

இது, உண்மை கதையின் அடிப்​படை​யில் உரு​வாகும் படம். அக்கா - தம்​பிக்​கான எமோஷனல் விஷ​யங்​களின் பின்​னணி​யில் நடக்​கும் கதை. இப்பதான் படம் தொடங்கி இருக்​கிற​தால மற்ற விவரங்​களை நான் சொல்ல இயலாது. என் தம்​பியா கார்த்தி கேயன் நடிக்கிறார். சுதீப் முக்​கிய​மான கதா​பாத்​திரத்​தில் வர்​றார். எனக்கும் அவருக்கும் காம்​பினேஷன் காட்​சிகள் நிறைய இருக்​கு. ஒசூர் பகுதி​யில் நடப்பது போன்ற படம். விரை​வில் படப்பிடிப்பு தொடங்குது.

பான் - இந்​தியா படமா?

இன்​னைக்கு கதை நல்​லா​யிருந்தா மொழி தாண்டி எல்லா பகுதியிலும் அந்​தப் படத்​தைப் பார்க்கிறாங்க. அதனால எல்லா மொழி பார்வையாளர்களுக்குமான படம் இது. அதுக்கு பான் இந்​தியா அப்​படிங்கற பெயர் தேவை​யில்​லை. இப்ப தெலுங்​கில் உரு​வான வெப் தொடர் ஒன்​றில் நடிச்​சிருக்​கேன். அமே​சான் பிரைம் வீடியோ​வில் ஜூலை​யில் வெளி​யாகும். சமுத்​திரக்​கனி சாரும் அதில் நடிச்​சிருக்​கார்.

தமிழ்ல இப்ப அதி​கமா நடிக்​கவே இல்​லை​யே?

தமிழ்ல நடிச்​சு, ஒன்​றரை வருஷ​ம் ஆச்​சு. அதுக்கு வாய்ப்பு வரலைன்னு அர்த்​தம் இல்​லை. நல்ல கதைகள்ல நடிக்​கணும்னு காத்​திருந்​தேன். நான் தொடர்ந்து நடிச்ச ஏழு, எட்டு படங்​கள், பெண்​ணிய கதைகளைக் கொண்​டது.

ஃபர்​ஹா​னா, டிரைவர் ஜமு​னா, சொப்பன சுந்​தரி, கிரேட் இண்​டியன் கிச்​சன், க/பெ.ரணசிங்​கம், கனா, காக்​கா​ முட்டை-னு எல்​லா​முமே நல்ல படங்​கள் ​தான். இன்​னைக்​கும் அந்தக் கதைகளும் அதில் என் கதா​பாத்​திரங்​களும் பேசப்​படு​து. அதனால, வர்ற எல்லா படங்​களை​யும் ஏத்​துக்க முடி​யாத நிலை இருக்​கு.

நல்ல கதைகளைத் தேர்வு பண்​ணி​தான் நடிக்​கிறேன். அதுக்குஎனக்கு நிறைய டைம் தேவைப்​படு​து. சினிமா நமக்கு ஒரு வாய்ப்​புக்கொடுத்​திருக்​கு. அதை தக்க வச்​சுக்​கணும்னு நினைக்​கிறேன். அதனால நல்ல கதைகளுக்கு காத்​திருக்​கிறேன்.

இப்ப தெலுங்​குல நாலு படங்​கள் பண்​றேன். ஓ சுகு​மாரி, வெங்​கடேஷ் சார் படம், நாகார்​ஜுனா சாரோட படம் பண்​றேன். இது இல்​லாம இன்னும் இரண்டு படங்​கள்ல ஒப்​பந்​தமாகி இருக்​கேன். தமிழ் சினி​மா​ தான் எனக்கு வாழ்க்கை கொடுத்​திருக்​கு. அதை விட்​டு​விட முடி​யாது. அதுல​யும் கவனம் செலுத்​து​வேன்.

ஓடிடி- வரு​கைக்கு பிறகு நடிகர்​கள் பிசி​யா​யிட்​டாங்​கன்னு சொல்​றாங்​களே?

உண்​மை ​தான். இன்​னைக்கு மொழி ஒரு பிரச்சினை​யில்​லை. நடிகரா இருக்​கிற ஒருத்​தர், தமிழ்ல மட்டுமில்ல, மலை​யாளத்​துல, இந்​தி​யில, தெலுங்​குலன்னு எந்த மொழி​யில​யும் நடிக்​கலாம். ஒரு நல்ல நடிகருக்கு எப்​போதும் அங்கீ​காரம் தேவையா இருக்​கு. ஓடிடி வந்த பிறகு மற்ற மொழிகளுக்​கும் போய் சேர்​ற​தால அந்த அங்​கீ​காரம் கிடைக்குன்னு நினைக்​கிறேன். இது ஆரோக்​கிய​மான விஷ​யம்.

தமிழ், தெலுங்​கு, அடுத்து இந்​திக்கு போகிற எண்​ணம் இருக்கா?

இந்​தி​யில, ஜோதிகா மேடத்​துக்கு சரி​யான கதைகள் அமைஞ்சிருக்​கு. அது போல கதைகள் அமையணும். எனக்கு தமிழ், தெலுங்​கில் நல்ல பெயர் இருக்​கு. இந்​தப் பெயரை காப்பாற்றினா போதும்னு நினைக்​கிறேன். இந்​தி​யில​யும் சரியான கதைகள் கிடைச்சா நடிப்​பேன். பண்​ணணுமே அப்படிங்கறதுக்​காக ஏதோ ஒரு கதையை தேர்வு பண்ணி அங்க நடிக்க முடி​யாது.

SCROLL FOR NEXT