லாரன்ஸ் ஆஃப் அரேபி​யா...

 
தமிழ் சினிமா

காட்சிச் சிதறல் - காற்றின் காட்சி மொழி | ஒளி என்பது வெளிச்சமல்ல 36

சி.ஜெ.ராஜ்குமார்

திரைக்​கதை​யில் ‘காற்​று’ ஒரு கண்​ணுக்​குத் தெரி​யாத கதா​பாத்​திரம். ஒலிக் குறிப்​பு​கள் மற்​றும் காட்சிச் சிதறல்​கள் வழி​யாக மட்​டுமே உணரப் படக்​கூடிய இந்​தக் காற்​று, ஒரு காட்​சி​யின் தீவிரத்தை மாற்​று​வதோடு, பார்​வை​யாளரின் உணர்​வு​களை​யும் நேரடி​யாகக் கையாளும் வல்​லமை கொண்​டது.

உணர்​வு​களைக் கையாளுதல்

காற்று ஒரு திரவ நிலைப் பொருள் போலச் செயல்​படு​கிறது. அது அமை​தி​யாக வீசும்​போது ஒரு ஏகாந்​த​மான ‘மூட்’ உரு​வாகிறது. அதே காற்று சீறும்​போது, அது ஓர் அழி​வின் அல்​லது ஒரு மாபெரும் மோதலின் அறிகுறி​யாக மாறுகிறது.

தொடு​தல் உணர்வு (Tactile Sense): நடிகர்​களின் தலை​முடி மற்​றும் உடைகள் காற்​றில் அசைவதைப் பார்க்​கும்​போது, பார்​வை​யாளர் அந்த இடத்​தின் வெப்​பத்​தையோ அல்​லது குளிர்ச்​சி​யையோ தனது தோலில் உணரத் தொடங்​கு​கிறார்.

ஒலி அதிர்​வு​கள்: மரக்​கிளை​களின் உரசல் மற்​றும் காற்று சீறும் சத்​தம், பின்​னணி இசை இல்​லாமலேயே காட்​சி​யின் பதற்​றத்தை அதி​கரிக்​கப் பயன்​படும்.

வின்ட் மெஷின் மற்​றும் தொழில்​நுட்​பம்

இயற்​கைக் காற்று கேம​ரா​வுக்கு சாதக​மாக வீசாத​போது, ஒளிப்​ப​தி​வாளர்​கள் ‘வின்ட் மெஷின்’ அல்​லது ராட்சத மின்​விசிறிகளை நாடு​கின்​றனர்.

கட்​டுப்​படுத்​தப்​பட்ட வேகம்: மெல்​லிய தென்​றல் முதல் சூறாவளி வரை ஒளியமைப்​புக்கு இடையூறு இல்​லாமல் காற்​றைச் செலுத்த முடி​யும்.

டைனமிசம்: ஒரு நிலை​யான ஷாட்​டில் (Static Shot) கூட, திரைச்​சீலைகள் அல்​லது நடிகரின் ஆடைகள் காற்​றில் அசைவது அந்​தக் காட்​சிக்கு உயிரோட்​டத்​தைத் தரும்.

காற்​றைப் படம்​பிடிக்​கும் போது, அதன் வேகத்​துக்கு ஏற்ப கேம​ரா​வின் ‘ஷட்​டர் ஸ்பீடு’ மற்​றும் ‘ஃபிரேம் ரேட்’ ஆகிய​வற்​றைச் சரி​யாக அமைப்​பது அவசி​யம். அப்​போது​தான் காற்​றில் பறக்​கும் தூசிகளோ அல்​லது இலைகளோ மிகத் தெளி​வாகவோ அல்​லது ஒரு​வித​மான மென்​மை​யான அசைவிலோ பதி​வாகும்.

ஒளிப்​ப​தி​வாளர்​களின் விருப்​பம் -ஜாங் யிமோ -

‘தி ஹீரோ’ சீன இயக்​குநர் ஜாங் யிமோ​வின் படங்​களில் காற்று ஒரு தற்​காப்​புக் கலைக் கரு​வி​யாகவே செயல்​படும். ‘த ஹீரோ’ படத்​தில், உதிர்ந்த காய்ந்த இலைகளுக்கு நடுவே நடக்​கும் வாள் வீச்சு சண்​டை​யில், காற்​றின் வேகம் அந்த வீரர்​களின் மன உறு​தி​யைப் பிர​திபலிக்​கும். இலைகள் காற்​றில் சுழன்று பறப்​பது, அந்​தச் சண்​டை​யின் வேகத்​தை​யும் திசையை​யும் (Directional Energy) பார்​வை​யாள​ருக்​குக் கடத்​தும்.

ஒளிப்​ப​தி​வாளர் அழகப்​பனின் ‘ஒரே கடல்’

மலை​யாளத் திரைப்​பட​மான ‘ஒரே கடல்’ படத்​தில் ஒளிப்​ப​தி​வாளர் அழகப்​பன் தனித்​து​வ​மான நுட்​பத்​தைக் கையாண்​டார். படத்​தின் பெரும்​பாலான காட்​சிகள் அடுக்​கு​மாடி குடி​யிருப்​பின் உட்​புறத்​திலேயே நடக்​கும். அந்த இடத்​தின் தேக்க நிலையை (Stillness) உடைக்க அவர் வின்ட் மெஷின்​களைப் பயன்​படுத்​தி​னார்.

கடலோரத்​தில் இருக்​கும் அந்த அறை​யில், கடல் காற்​றின் ஈரப்​ப​தத்​தை​யும் அதன் அலை அலை​யான அசைவை​யும் (Replicating Sea Breeze) நடிகர்​களின் அசைவு​களில் கொண்டு வந்​தார். இது உட்​புறக் காட்​சிகளுக்கு ஒரு ‘டைனமிசம்’ வழங்​கியதுடன், கதை மாந்​தர்​களின் அலை​பா​யும் மனநிலை​யை​யும் குறி​யீ​டாக உணர்த்​தி​யது.

காற்​றின் முப்​பரி​மாண மொழி: வெளி​யும் உளவியலும் (Wind Defines Space)

ஒளிப்​ப​தி​வில் காற்று என்​பது ஒரு நிலப்​பரப்​பின் ஆழத்​தை​யும் அடுக்​கு​களை​யும் வெளிப்​படுத்​தும் ஒரு கரு​வி. ஒரு தட்​டை​யான பிம்​பத்தை இடம் சார்ந்த உயிர்ச்​சக்​தி​யுடன்

மாற்​றக் காற்று உதவு​கிறது:

* முன் புலம் -இலைகள் லேசாக நடுங்​கு​வது.

* நடுப் புலம் -காற்​றில் பறக்​கும் தூசுப் படலங்​கள்.

* பின் புலம் -மரங்​கள் ஒட்​டுமொத்​த​மாக ஆடு​வது.

இந்த 3 அடுக்​கு​களும் ஒரே சீராகவோ அல்​லது வெவ்​வேறு வேகத்​திலோ அசை​யும் போது, அந்​தச் சட்​டகத்​துக்​குள் ஒரு ‘முப்​பரி​மாணத் தன்​மை’ உரு​வாகிறது. காற்​றின் திசை, வெளி​யின் வெறுமை மற்​றும் ஏதோ ஒன்று நம்மை நெருங்கி வரு​கிறது என்​கிற அந்த அமானுஷ்ய உணர்வு (Presence of something approaching) ஆகிய​வற்றை அசைவு​களின் மூலமே காற்று உணர்த்​துகிறது.

காற்​றின் உளவியல் நீட்சி

ஒரு கதா​பாத்​திரத்​தின் அக நிலை​யைப் பிரதிபலிக்​கும் கண்​ணாடி​யாக​வும் காற்று செயல்​படுகிறது. ஓர் உண்​மையை உணரும் கணத்​தில் ஏற்​படும் திடீர் காற்​று, பெரும் துயரம் நிகழ்​வதற்கு முன்​னால் நில​வும் உறைந்து போன நிசப்​த​மான காற்​று, மோதல்​கள் வெடிக்​கும் போது வேகம் எடுக்​கும் சுழல் காற்​று, இவை அனைத்​தும் வசனங்​கள் இல்​லாமலேயே அந்​தத் தருணத்​தின் கனத்தை அதி​கப்​படுத்​தும் ‘சொற்​களற்ற உணர்ச்​சிப் பெருக்​கி’ (Non-verbal emotional amplifier) போலச் செயல்​படு​கின்​றன.

போர்த் திரைப்​படங்​களில் காற்​றின் தாக்​கம்

போர் முனை​யில் காற்​றின் பயன்​பாடு மிக​வும் முக்​கிய​மானது. அது வீரர்​களின் சோர்​வை​யும், போர்க்​களத்​தின் பயங்​கரத்​தை​யும் வெளிப்​படுத்த உதவும்.

‘சே​விங் பிரைவேட் ரையன்’

கடற்​கரை சமர் காட்​சிகளில், மணல் துகள்​கள் காற்​றில் பறந்து கேமரா லென்​ஸில் படு​வது போன்ற காட்​சிகள், அந்​தப் போரின் தீவிரத்தை யதார்த்த மாகக் காட்​டின.

‘டன் கிர்க்’ (Dunkirk): கிறிஸ்​டோபர் நோலன் இந்​தப் படத்​தில் காற்​றின் இரைச்​சலை ஒரு ‘டைம் பாம்’ போலப் பயன்​படுத்​தி​னார். கடற்​கரை​யில் காத்​திருக்​கும் வீரர்​களின் தலை​முடி காற்​றில் அலைக்​கழிக்​கப்​படு​வது, அவர்​கள் இயற்கையிட​மும் காலத்​திட​மும் தோற்​றுக்​கொண்​டிருப்​பதை உணர்த்​தும்.

‘மேட் மேக்​ஸ்: ஃபியூரி ரோட்’

பாலை​வனப் புயல் காட்​சிகள் காற்​றின் கோரத் தாண்​ட​வத்​தைக் கண்​களுக்கு ஒரு காட்சி விருந்​தாக மாற்​றின. மணல் துகள்​களும் புகை​யும் காற்​றில் சுழல்​வது ஒரு அமானுஷ்ய​மான சூழலை உரு​வாக்​கின.

‘லாரன்ஸ் ஆஃப் அரேபி​யா’

பாலை​வனக் காற்​றி​னால் உரு​வாகும் மணல் மேடு​களின் அசைவு, அந்த இடத்​தின் புவி​யியல் மாற்​றத்தை அழகியல் ரீதி​யாகக் காட்​டியது. காற்றை ஒளியமைப்​புடன் இணைத்து பயன்​படுத்​து​வது ஓர் உயர்ந்த கலை.

‘வால்​யூமெட்​ரிக் லைட்​டிங்’ (Volumetric Lighting) அல்​லது ‘காட் ரேஸ்’ (God Rays) போன்ற ஒளிக்​கற்​றை​கள் காற்​றில் பறக்​கும் தூசித் துகள்​கள் அல்​லது புகை மூல​மாகத் தென்​படும் போது, காட்சி ஓர் ஆன்​மீகத் தன்​மையை​யும் ஆழத்​தை​யும் பெறுகிறது.

இதனை ஸ்டூடியோ​வில் செயற்​கை​யாக உரு​வாக்க ‘ஹேஸ்’ (Haze) அல்​லது ‘ஸ்​மோக்’ (Smoke) ஆகியவை பயன்​படுத்​தப்​படு​கின்​றன. போல​வே, காற்​றின் திசை (Direction) மற்​றும் தொடர்ச்​சி​யும் (Continuity) மிக​வும் முக்​கிய​மானவை. ஓர் காட்​சி​யில் காற்று இடமிருந்து வலமாக வீசி​னால், அடுத்த ஷாட்​டிலும் அதே திசை தொடர வேண்​டும். இல்​லை​யெனில், அது பார்​வை​யாளரின் கவனத்​தைத் திசை​திருப்​பும்.

காட்​சி​யின் உளவியல் தாக்​கத்​தி​லும் காற்று மிக முக்​கியப் பங்கு வகிக்​கிறது. மெது​வாக அசை​யும் திரைச்​சீலை ஒரு எதிர்​பார்ப்பை (Anticipation) உரு​வாக்​கலாம்; திடீரென கதவு அடிபடு​வது ஓர் அதிர்ச்​சியை (Shock) ஏற்​படுத்​தும்​. எனவே, காற்​று என்​பது ஒரு ‘எஃபெக்ட்​’ மட்​டுமல்​ல, அது ஒரு ‘நேரேட்​டிவ்​ டூல்​’ (Narrative Tool) என்​ப​தைக்​ கவனத்தில் கொள்ள வேண்டும்.

(புதன் தோறும் ஒளிகாட்டுவோம்)

- cjrdop@gmail.com

SCROLL FOR NEXT