சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் திரைப்படம், ‘புருஷன்’. இதில் தமன்னா, யோகிபாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை அவ்னி சினிமாக்ஸ், பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கிறது. ஆக் ஷன் கலந்த காமெடி படமான இதன் கிளைமாக்ஸ் காட்சிக்கான படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக விஷால் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுபற்றி விஷால் கூறும்போது, “பரபரப்பான சண்டைக் காட்சியின்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு முதுகில் காயமானது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு முழுமையாகக் குணமடைய மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால், நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. விரைவில் குணமடைந்து, மீண்டும் எனது வழக்கமான செயல்பாடுகளுக்குத் திரும்ப காத்திருக்கிறேன். அக்கறையுடன் விசாரித்த அனைவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.