விஜய்யின் ‘தெறி’, அஜித்குமாரின் ‘மங்காத்தா’ திரைப்படங்கள், ரீ ரிலீஸில் மோதுகின்றன. விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்த படம், ‘தெறி’.
அட்லி இயக்கி வெற்றி பெற்ற இப்படம் 2016-ம் ஆண்டு வெளியானது. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார். ‘ஜனநாயகன்’ வெளியாகாத நிலையில், பொங்கலை முன்னிட்டு இந்தப் படத்தை ஜன. 15-ல் மறு வெளியீடு செய்வதாக அறிவித்திருந்தார் கலைப்புலி எஸ்.தாணு.
சில காரணங்களால் அன்று வெளியாகவில்லை. இந்நிலையில் வரும் 23-ம் தேதி இப்படத்தை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளார் தாணு.
அதே போல, அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன் நடித்து 2011-ம் ஆண்டு வெளியான படம் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கிய இப்படம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஜன. 23-ம் தேதி ரீரிலீஸாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் ரீ ரிலிஸில் விஜய், அஜித் படங்கள் மோதுவது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.