தமிழ் சினிமா

சர்வதேச எம்மி விழாவில் விருது வழங்கும் விஜய் சேதுபதி - முதல் இந்தியராகச் சாதனை

நிலா

அமெரிக்கத் தொலைக்​காட்​சித் துறை​யில் சிறந்து விளங்​குபவர்​களைக் கவுர​விக்​கும் வித​மாக எம்மி விருது வழங்​கப்​பட்டு வரு​கிறது. ஒவ்​வொரு ஆண்​டும் வழங்​கப்​படும் இந்த விருது விழா​வில், விருது வழங்​கு​வதற்கு உலக அளவில் பிரபலமானவர்​களை அழைப்​பது வழக்​கம். இந்த முறை நடிகர் விஜய் சேதுபதி அழைக்​கப்​பட்​டுள்​ளார். இதன் மூலம் இவ்​விழா​வில் விருதை வழங்​கும் முதல் இந்​தி​யர் என்ற பெரு​மையை அவர் பெறுகிறார்.

அமெரிக்​கா​வின் நியூயார்க் நகரில் நவ. 23-ல் நடை​பெறும் 54-வது சர்​வ​தேச எம்மி விருது விழா​வில், அவர் பங்​கேற்று விருது வழங்க உள்​ளார். விஜய் சேதுபதி இதில் இடம்​பெறு​வதற்கு, சர்​வ​தேச எம்மி விருதுகளை வழங்​கும் ‘இன்​டர்​நேஷனல் அகாடமி ஆஃப் டெலி​விஷன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்​சஸ்’அமைப்​பின் வாரிய உறுப்​பின​ரான கவிதா குப்தா, முக்​கியப் பங்​காற்​றியுள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT