தமிழ் சினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட காட்சிகள் சமூக வலைதளத்தில் கசிவு

வேட்டையன்

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் காட்சிகள் சில சமூக வலைதளத்தில் கசிந்துள்ளன. இதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனத்துக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அரசியலில் கவனம் செலுத்தும் வகையில் நடிகர் விஜய், ஜனநாயகன் படம்தான் தனது கடைசி படம் என அறிவித்தார். இந்த படத்தில் அவருடன் பூஜா ஹெக்​டே, மமீதா பைஜு, பாபி தியோல் உள்பட பலர் நடித்துள்​ளனர். கே.​வி.என்​.புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இப்​படத்தை கடந்த ஜன.9-ல் ரிலீஸ் செய்ய போவ​தாக அறி​வித்​திருந்​தனர்.

          

இந்நிலையில், இந்த படத்​தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இடம் பெற்​றுள்​ள​தாகக் கூறி, படத்தை மறுஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. பட தணிக்கை சார்ந்த சிக்கல் காரணமாக இந்தப் படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் மூன்று காட்சிகள் சமூக வலைதளத்தில் கசிந்துள்ளன. இதன் மொத்த ரன் டைம் சுமார் 10+ நிமிடங்களை கொண்டுள்ளது. ஜனநாயகன் படத்தின் காட்சிகள் கசிய காரணமானவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனத்துக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT