விஜய் ஆண்டனி நடித்துள்ள படத்துக்கு ‘அப்பா குட்டி’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
‘நூறு சாமி’ படத்தை முடித்துவிட்டு, மு.மாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வந்தார் விஜய் ஆண்டனி. இப்படத்தில் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி இசை மற்றும் எடிட்டிங் ஆகிய பொறுப்புகளையும் ஏற்று தயாரித்தும் வருகிறார். தற்போது இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதால், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு ‘அப்பா குட்டி’ எனப் பெயரிட்டுள்ளனர். இதில் ப்ரீத்தி அஸ்ரானி, ஹரிப்ப்ரியா, பக்ஸ், அருவி மதன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்துள்ளனர். ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு. இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
‘அப்பா குட்டி’ படத்தின் பணிகளை முடித்துவிட்டு, ‘அயோத்தி’ இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய் ஆண்டனி. இதன் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.