தமிழ் சினிமா

பழம்​பெரும் இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச ராவ் உடல் தகனம்

கமல்ஹாசன் உட்பட திரையுலகினர் அஞ்சலி

செய்திப்பிரிவு

பழம்​பெரும் இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச ராவ், சென்​னை​யில் கால​மா​னார். அவருக்கு வயது 95.

இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச ராவ், ஆந்​தி​ரா​வில் உள்ள நெல்​லூர் மாவட்​டம், உதயகிரியில் 1931-ம் ஆண்டு பிறந்​தவர். சென்​னைப் பல்​கலைக்​கழகத்​தில் இயற்​பியல் பட்​டம் பெற்ற இவர், ‘மா​யாபஜார்’ (1957) உள்பட சில படங்​களில் உதவி இயக்​குந​ராக பணி​யாற்​றி​னார். பின்​னர் ‘நீதி நிஜாயி​தி’ என்ற தெலுங்கு படம் மூலம் இயக்​குந​ராக அறி​முக​மான அவர், தெலுங்கு, தமிழ், கன்​னடம், இந்​தி, மலையாள மொழிகளில், 60 திரைப்​படங்​களை இயக்​கி​யுள்​ளார்.

கன்னட நடிகர் ராஜ்கு​மார், கமல்​ஹாசன் ஆகியோ​ருடன் அதிக நட்​போடு இருந்த இவர், தமிழில், திக்​கற்ற பார்​வ​தி, ராஜ​பார்​வை, பேசும் படம், அபூர்வ சகோ​தரர்​கள், மைக்​கேல் மதன காம​ராஜன், மகளிர் மட்​டும், லிட்​டில் ஜான், சின்ன வாத்​தி​யார், மும்பை எக்​ஸ்​பிரஸ், காதலா காதலா ஆகிய படங்​களை இயக்​கி​யுள்​ளார். இவர் கடைசி​யாக தனது 94-வது வயதில் ‘சிங் கீதம்’ என்ற படத்தை இயக்கி இருந்​தார். கடந்த ஜூன் மாதம் இப்​படம் தமிழ், தெலுங்​கில் வெளி​யானது.

நகைச்​சுவை, சயின்ஸ் பிக்‌ஷன், ஃபேன்​டஸி என ஒவ்​வொரு படத்​தை​யும் வித்​தி​யாச​மான ஜானரில் இயக்​கி​யுள்ள இவர், வசனமே இல்​லாமல் இயக்​கிய ‘பேசும்​படம்’ (புஷ்பக விமானம்), மிகுந்த வரவேற்​பைப் பெற்​றது. 2 தேசிய விருதுகளைப் பெற்​றுள்ள இவர், ஆந்​திர அரசின் நந்தி விருதை 5 முறை​யும் கர்​நாடக மாநில விருதுகளை 3 முறை​யும் பெற்​றுள்​ளார். இந்​திய திரைப்​படக் கூட்​டமைப்​பின் வாழ்​நாள் சாதனை​யாளர் விருதை​யும் பெற்​றிருக்​கிறார்.

சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த அவர் வயது மூப்பு காரண​மாக கடந்த சில நாட்​களாக உடல் நலமில்லாமல் இருந்தார். இதையடுத்து சென்​னை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை ஒன்​றில் அனு​ம​திக்​கப்​பட்​டிருந்​தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு கால​மா​னார். அவர் மறைவுக்​குத் திரை​யுல​கினர், அரசி​யல் தலை​வர்​கள், ரசிகர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். அவர் இறு​திச்​சடங்கு நெசப்பாக்கத்தில் நேற்று நடை​பெற்​றது.

என்​னைச் செதுக்​கிய​வர்

சென்​னை​யில் சீங்​கீதம் சீனி​வாச​ராவ் உடலுக்கு அஞ்​சலி செலுத்​திய பின் கமல்​ஹாசன் பேசும்​போது, “நீண்ட நட்​பு; நட்பு என்று சொல்​வதற்கு எனக்கு வயது பொருந்​தாது. ஆனாலும் அது​தான் எங்​களுக்​குள் இருந்த உறவு. சிங்​கீதம் இளமை​யில் மாண்​டு​விட்​டார் என்​று​தான் சொல்​வேன். அவர் உடலுக்​குத்​தான் வயது அதி​கம், மனது இளமை​யானது. அவர் இயக்​கிய அனைத்து திரைப்​படங்​களும் முக்​கிய​மானவை. என் வாழ்க்​கை​யில் என்​னைச் செதுக்​கிய பலரில் இவரும் ஒரு​வர். மனதில் பட்​டதைச் சொல்​லக் கூடிய​வர். அது​தான் அவர் இளமை​யின்​ பொருள்​, அவர்​ இளமை​யின்​ ரகசி​ய​மும்​ கூட” என்​றார்​.

SCROLL FOR NEXT