சென்னை செம்பரம்பாக்கத்தில், வேல்ஸ் திரைப்பட நகரம் மற்றும் வர்த்தக மையத்தை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் இணைந்து திறந்து வைத்தனர்.
வேல்ஸ் குழுமம் சார்பில், சென்னை செம்பரம்பாக்கத்தில் வேல்ஸ் திரைப்பட நகரம் உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படம், தொலைக்காட்சி தயாரிப்புகளுக்கான முக்கியதளமான இங்கு வெளிப்புற படப்பிடிப்பு தளங்கள், நவீன தயாரிப்பு வசதிகள், விருந்தினர் தங்குமிடங்கள், 6 திரையரங்குகள், உணவக வளாகம் உள்ளன. இந்த வளாகத்துடன் வேல்ஸ் வர்த்தக மையமும் ஒரே நேரத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொள்ளக்கூடிய வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
வர்த்தகக் கண்காட்சிகள், தொழில் மற்றும் வணிக மாநாடுகள், கார்ப்பரேட் நிகழ்வுகள், அரசியல் கூட்டங்கள், விருது விழாக்கள், திருமணங்கள், உச்சி மாநாடுகள் மற்றும் பெரும் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் தங்கம் தென்னரசு, நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
வேல்ஸ் நிறுவனங்களின் தலைவர் ஐசரி கே.கணேஷ், டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், வேல்ஸ் குழும துணைத் தலைவர் குஷ்மிதா கணேஷ் உடனிருந்தனர். சென்னை, பான்-இந்தியா திரைப்பட தயாரிப்பு மையமாக இன்று உருவெடுத்துள்ளது என கமல் தெரிவித்தார்.