பிரபல நடிகை வத்சலா ராஜகோ பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 93.
நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் வத்சலா ராஜகோபால். பாலு மகேந்திராவின் கதை நேரம், ராதிகாவின் சித்தி உள்பட ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். ரோஜா, சதி லீலாவதி, காலமெல்லாம் காதல் வாழ்க, ரிதம், அந்நியன், வின்னர், மொழி உள்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களுக்குப் பாட்டியாக நடித்துள்ள இவர், ஜமீன் பல்லாவரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
வயது மூப்பு காரணமாக நேற்று அதிகாலை காலமானார். அவரது இறுதிச் சடங்கு குரோம்பேட்டையில் நேற்று நடைபெற்றது. மறைந்த வத்சலா ராஜகோபாலின் கணவர் ராஜகோபால் ஏற்கெனவே காலமாகிவிட்டார். அவருக்கு சுரேஷ், சிவாஜி ஆகிய மகன்களும் காயத்ரி என்ற மகளும் உள்ளனர். மூத்த மகன் அசோக் ஏற்கெனவே இறந்துவிட்டார். நடிகை வத்சலா ராஜகோபாலின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.