நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ’வா வாத்தியார்’ படத்தை டிசம்பர் 24-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்த படம் ‘வா வாத்தியார்’. அப்படத்தின் மீதிருந்த பைனான்ஸ் பிரச்சினையால் வெளியாகவில்லை. மீண்டும் எப்போது வெளியீடு என்பது தெரியாமல் இருக்கிறது. இதனிடையே, டிசம்பர் 24-ம் தேதி ‘வா வாத்தியார்’ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
டிசம்பர் 24-ம் தேதிக்குள் படத்தின் மீதிருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்து விட வேண்டும் என்ற முனைப்பில் படக்குழு இருக்கிறது. ஏனென்றால் டிசம்பர் 24-ம் தேதி எம்.ஜி.ஆர் இறந்த தினமாகும். ‘வா வாத்தியார்’ படமும் எம்.ஜி.ஆர் ரசிகர்களை மையப்படுத்திய படம் என்பதால் இந்த தேதி சரியாக இருக்கும் என்று நினைக்கிறது படக்குழு.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. இதில் கார்த்தி, ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.