எம்.ஜி.ஆர். இயக்கி நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தில் நடித்தவர் தாய்லாந்து நடிகை மெட்டா ரூங்ராட் (83). அந்தப்படத்தில் இடம்பெற்ற ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ பாடல் காட்சியில் இவரது நடனத்தை மறந்துவிட முடியாது. தாய்லாந்து நாட்டின் மூத்த நடிகையான இவர் சுமார் 180-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஹாலிவுட் நிறுவனங்கள் தயாரித்த படங்களிலும் நடித்துள்ளார். ‘ஆசியாவின் கருப்பு முத்து’ என்று அழைக்கப்பட்ட இவர், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அல்சைமர், பார்வைக் குறைபாடு உள்பட சில நோய்களால் அவதிப்பட்டு வந்த அவர் பாங்காக்கில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.