கோவை காந்திபுரத்தில் புதிய செல்போன் கடை ஒன்றை நடிகை த்ரிஷா நேற்று முன் தினம் திறந்து வைத்தார். இதற்காக அவர் கோவை விமான நிலையம் வந்தபோது, செய்தியாளர்கள், ‘அரசியலுக்கு வருவீர்களா?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் சொல்லாமல் கடந்து சென்றார்.
அவர் வருவதை ஓட்டி, கோவை காந்தி புரம் நூறடி சாலையில் ஏராளமான ரசிகர்களும் பொதுமக்களும் கூடினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
த்ரிஷாவை பார்ப்பதற்கு கடையின் முன்பு, ரசிகர்களும் பொதுமக்களும் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸாரும் த்ரிஷாவின் பாதுகாப்புக்காக வந்த பவுன்சர்களும் அவர்களை மேலும் முன்னேறாமல் தடுத்தனர்.
கடைத் திறப்பு விழா முடிந்து நடிகை த்ரிஷா, காரில் ஏறி நின்று ரசிகர்களைப் பார்த்து கையசைத்தார். சிலருக்கு கைகொடுத்தார். அவர், ரசிகர்கள் மத்தி
யில் பேச முயன்றபோது, மைக் வேலை செய்யாததால் பேசவில்லை. பின்னர் சிறிது தூரம் ‘ரோடு ஷோ’ சென்ற அவர் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். த்ரிஷாவின் இந்த ‘ரோடு ஷோ’ வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.