அருள்நிதி மற்றும் அமீர் இணைந்து நடித்துள்ள படம், ‘வேட்ட சாமி’. இதில் ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பெராடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி, இயக்குநர் தமிழ், கவிதா பாரதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘பம்பர்’ படத்தை இயக்கிய எம்.செல்வகுமார் இயக்கியுள்ள இப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் புரொடக் ஷன்ஸ் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் முதல் தோற்றத்தை, இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், ஆர்ஜே பாலாஜி வெளியிட்டுள்ளனர்.
‘நெல்லை மாவட்ட பின்னணியில் உருவாகும் இப்படத்தின் கதை, சங்கிலி பூதத்தார், சுடலை மாடன் உள்ளிட்ட தெய்வ வழிபாடுகளை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. சாதி, மத வேறுபாடுகளைத் தாண்டி, தலைமுறைகளாகத் தொடரும் சமூகப் பிரச்சினைகளை, மக்களின் ரத்தமும் சதையுமான வாழ்க்கைக்குள் சென்று பதிவு செய்யும் ஆக் ஷன் எமோஷனல் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றது படக்குழு.