’ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. ஜனவரி 9-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம் தணிக்கை பிரச்சினையால் வெளியாகவில்லை. இதனால் படத்தின் ஓடிடி உரிமையும் ரத்து செய்யப்பட்டது. மேலும், படமும் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழுவினர் கடும் சிக்கலில் இருந்தனர்.
இதனிடையே, தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக கட்சியினர் பெரும் வெற்றி பெற்று விஜய் முதல்வராக பதவியேற்றுள்ளார். இதனால் ‘ஜனநாயகன்’ படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஏனென்றால், மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்திருப்பதால் தமிழக உரிமை விற்பனை பழைய நிலையிலேயே தொடரும் எனக் கூறப்படுகிறது.
மேலும், முதலில் அமேசான் நிறுவனம் ‘ஜனநாயகன்’ படத்துக்காக போட்ட ஓடிடி ஒப்பந்தத்தை ரத்து செய்தது. தற்போது பல்வேறு நிறுவனங்கள் ‘ஜனநாயகன்’ படத்தின் ஒடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டியிட்டு வருகிறார்கள். இதனால் படக்குழுவினர் உற்சாகமாகி இருக்கிறார்கள்.