இயக்குநர் மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் படம், ‘சத்தியவான் சாவித்திரி’. பிரவீன் எஸ் விஜய் இயக்கும் இதில் சாருகேஷ், பாலசரவணன், மதுசூதனன், சுந்தர்ராஜன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா, மாலா பார்வதி, தீபா, ஏ.வெங்கடேஷ், பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் டிரஸ்டிக் புரொடக் ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல், உமேஷ் குமார் பன்சால் தயாரிக்கின்றனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
“சராசரி பெண்ணான கீர்த்தி சுரேஷ் அவரது சீனீயர், ஒரு வழக்கில் தவறான பக்கம் வாதாடும் போது, அதை அவருக்கு உணர்த்த முற்படுகிறார். அப்போதுதான் சீனியரின் அசல் முகம் வெளிப்படுகிறது.
அந்த வழக்கு கீர்த்தியின் வாழ்வை புரட்டிப் போடும் விதமாக இருக்கிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா என்பது கதை. நீதிமன்றத்தில் நடக்கும் ஒரு வழக்கை மையமாக வைத்து, கமர்ஷியல் அம்சங்களுடன் இப்படம் உருவாகி இருக்கிறது” என்றது படக்குழு.