தமிழ் சினிமா

‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படப்பிடிப்பு நிறைவு

ப்ரியா

ராஜேஷ் எம். இயக்​கிய ‘சிவா மனசுல சக்​தி’ படத்​தில் ஜீவா கதா​நாயக​னாக நடித்​திருந்​தார். அனு​யா, ஊர்​வசி, சந்தானம் நடித்த இப்​படம் வெற்றி பெற்​றது. இந்​நிலை​யில் ராஜேஷ் - ஜீவா கூட்​டணி 16 வருடங்​களுக்கு பிறகு மீண்டும் இணைந்​துள்ள படம் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’.

நகைச்​சுவைக்கு முக்​கி​யத்​து​வம் கொடுத்து உரு​வாக்​கப்​பட்​டுள்ள இப்​படத்​தில் இவா​னா, பரி​தாபங்​கள் சுதாகர் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். எம்​.சுகு​மார் ஒளிப்​ப​திவு செய்​திருக்​கும் இந்​தப் படத்​துக்கு யுவன் சங்​கர் ராஜா இசை அமைத்​துள்​ளார்.

          

இதை மலேசி​யா​வைச் சேர்ந்த மாலிக் ஸ்ட்​ரீம்ஸ் கார்ப்​பரேஷன் சார்​பில் டத்தோ அப்​துல் மாலிக் தயாரிக்​கிறார். இப்​படத்​தின் புரோமோ வீடியோ வெளி​யாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலை​யில் இதன் படப்​பிடிப்பு நிறைவடைந்துள்​ள​தாக படக்​குழு தெரி​வித்​துள்​ளது. படப்​பிடிப்​புக்​குப் பிந்​தைய பணி​கள் நடை​பெற்று வரு​வ​தாக​வும் விரை​வில் இப்படம் பற்​றிய புதிய தகவல்​கள் வெளியாகும் என்​றும் படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT