தமிழ் சினிமா

‘தி டார்க் ஹெவன்’ டீமின் ‘தி லாஸ்ட் கேஸ்’

நிலா

சித்து, தர்​ஷிகா நடிப்​பில் சமீபத்​தில் வெளியாகி வரவேற்​பைப் பெற்ற திரைப்​படம், ‘தி டார்க் ஹெவன்’. இந்த க்​ரைம் த்​ரில்​லர் படத்தை பாலாஜி இயக்​கி​யிருந்​தார். ட்​ரீம் 7 சினிமாஸ் நிறு​வனம் தயாரித்​திருந்​தது. இந்​நிலை​யில் இதே டீம் மீண்​டும் இணை​யும் படத்​துக்கு ‘தி லாஸ்ட் கேஸ்’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர்.

சித்து நாயக​னாக நடிக்​கும் இப்​படத்​தில் தர்​ஷிகா நாயகி​யாக நடிக்​கிறார். ஜெயக்​குமார் உள்​பட பலர் நடிக்​கின்​றனர். இதன் பூஜை சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்​து​கொண்​டனர். இயக்​குநர் பாலாஜி கூறும்​போது, “தி டார்க் ஹெவன், ஓடி​டி​யிலும் வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. அந்த மகிழ்ச்​சி​யோடு இப்படத்தை தொடங்கி இருக்​கிறோம்.

இது​வும் க்​ரைம் த்​ரில்​லர் பட​மாகத்​தான் உரு​வாக இருக்​கிறது. ஒரு மலைப் பகுதி​யில் நடை​பெறும் குற்​றப் புலனாய்வு கதையாக இருந்​தா​லும் இந்​தப் படம் முற்​றி​லும் மாறு​பட்​ட​தாக இருக்​கும். இதில் பின்​புலமாக வரு​கிற நில​வியல் காட்​சிகள், படத்தை வேறு​படுத்​திக் காட்​டும்” என்​றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT