தமிழ் சினிமா

முனீஸ்​காந்த் கதை நாயக​னாகும் ‘தி டார்ம்’

ப்ரியா

முனீஸ்​காந்த் முதன்மை கதா​பாத்​திரத்​தில் நடிக்​கும் படம், ‘தி டார்ம்’. இதில் ஷாலினி, காசி தங்​கம், சபரீஷ், சாம் ஜான், அருண் கார்த்​திக், நிகில் நாயர்​, வசுந்​தரா ஸ்ரீநாத் உள்​ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இளை​ய​ராஜா ஒளிப்​ப​திவு செய்​யும் இந்​தப் படத்​துக்கு சாம் விஷால் இசையமைக்​கிறார். இதை குட் ஸ்டஃப் சார்​பில் பி.டில்லி தயாரிக்​கிறார். தீபா ஸ்ரீதர் இயக்​கு​கிறார்.

இப்​படத்​தின் தொடக்க விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்​து​கொண்​டனர். “அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகை​யில் புது​மை​யான கதை அம்சத்துடன் இப்​படம் உரு​வாகிறது” என்று படக்​குழு தெரிவித்துள்​ளது.

          
SCROLL FOR NEXT