தமிழ் சினிமா

புது​முகங்​களை இயக்குகிறார் ‘மொத ராத்திரி’ இயக்​குநர்

நிலா

அறி​முக இயக்​குநர் ராஜா கருப்​ப​சாமி இயக்​கத்​தில் ரிஷி​காந்த், அனிஷ்மா அனில்​கு​மார், சேத்​தன், ஏ.வெங்​கடேஷ், பகவதி பெருமாள் என பலர் நடித்திருந்த படம் ‘மொத ராத்​திரி’. மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரித்துள்ள இப்​படம் ஆக.21-ம் தேதி வெளியாகி வரவேற்​பைப் பெற்​றுள்​ளது.

இதையடுத்து அடுத்த படத்​துக்​கான வேலை​யில் இருக்​கும் இயக்குநர் ராஜா கருப்​ப​சாமி கூறும்​போது, ‘‘மொத ராத்​திரி படம் எதிர்​பார்த்​ததை விட அதிக வெற்​றியைப் பெற்​றிருக்​கிறது. பட வெளி​யீட்​டுக்​குப் பிறகு ஆட்​டோ​வில் சென்​று​கொண்​டிருந்​தேன். இறங்​கும்​போது ஆட்​டோக்​காரர், பணம் வாங்க மாட்​டேன் என்று சொல்​லி​விட்​டார். “இப்​படி ஒரு சிறந்த படத்​தைக் கொடுத்திருக்கீங்க, திருப்​தியா இருக்​கு, அடுத்தும் நல்ல படம் கொடுங்க, காசு வேண்​டாம்” என்று மறுத்​து​விட்​டார்.

இதுவே இந்​தப் படம் நன்​றாக ரீச் ஆகி​யிருக்​கிறது என்​ப​தற்​கான அடை​யாளம்​தான். இதில் நான் நடித்​திருப்​பது பற்றி கேட்கிறார்கள். எனக்கு நடிப்பு ஆசை இருந்​தது. இருந்​தா​லும் நான் நடித்த கேரக்​டரில் வேறொரு நடிகரைத்​தான் பேசி வைத்திருந்தோம்.

பட்​ஜெட் உள்​ளிட்ட விஷ​யங்​களால் அவர் நடிக்க இயல​வில்​லை. அதனால் நான் நடிக்க வேண்​டிய​தாகி​விட்​டது. அடுத்து சில வாய்ப்பு​கள்​ வந்​திருக்​கின்றன. அடுத்​தும்​ ஊர்க்​ கதையைத்​தான்​ எடுக்​க இருக்​கிறேன்​. புது​முகங்​கள்​ நடிக்​க இருக்​கிறார்​கள்​. அதற்கான வேலை போய் கொண்டிருக்கிறது” என்றார்.

SCROLL FOR NEXT