தமிழ் சினிமா

ஒளிப்பதிவின் பரிமாணம்: பார்வை புரட்சி | ஒளி என்பது வெளிச்சமல்ல 60

சி.ஜெ.ராஜ்குமார்

கேமரா மாறிய ஒவ்​வொரு முறையும் மனிதனின் தொழில்​நுட்​பம் மட்​டும் மாறவில்லை; சினிமா பார்க்​கும் மனிதனின் கண்​களும், கதையை உரு​வாக்​கும் ஒளிப்​ப​திவாளனின் சிந்​தனை முறையும் சேர்ந்தே மாறின.

சினிமாவின் வரலாறு என்​பது லென்ஸ் களின், சென்​சார்​களின் அல்​லது ஃபிலிம் ரோல்​களின் வரலாறு மட்​டுமே அல்ல. அது, மனிதன் தன் மனதி​லிருக்​கும் உணர்வை ஒளியாக மாற்றி, அதைத் திரையில் பிம்​பமாகச் செதுக்​கக் கற்​றுக்​கொண்ட ஒரு நீண்ட தத்​து​வப் பயணம்.

கேம​ராவின் வடிவம் மற்​றும் ஃபிலிம் ஸ்​டாக்​கின் கெமிஸ்ட்ரி மாறியபோது, ஒளிப்​ப​திவாளர் உல​கத்​தைப் பார்த்த விதமும் மாறியது. வேதி​யியலின் கட்​டுப்​பாடுகளி​லிருந்து டிஜிட்​டல் உல​கத்​தின் எல்லை​யற்ற சாத்​தி​யங்​கள் வரை ஒளிப்​ப​திவாளர் சிந்​தித்த முறை எப்​படிப் பரிணா​மம் அடைந்​தது என்​ப​தன் விரிவான காட்சி வரலாறு இது.

கருப்பு – வெள்ளை காலம் - நிழல்​கள் வரைந்த காவியங்கள்: ஆரம்​பகால சினிமாவில் நிறம் இல்லை. ஆனால், அது நிறமற்றதாக இருக்​க​வில்லை. இந்​திய சினிமாவில் கருப்பு-வெள்ளை காலத்​தில் ஒளிப்​ப​திவு, ஒரு நுண்​கலை​யாக உயர்ந்​தது.

மாருதிராவ்: ஸ்டூடியோ லைட்​டிங் முறைகளில் மிகத் துல்​லிய​மான லைட் ரேஷியோ மற்​றும் ஷார்ப் ஃபோகஸ் நுட்​பங்​களைக் கொண்டு வந்து, தொடக்​ககாலத் தென்​னிந்​திய சினிமாவில் காட்சி மொழியை வடிவ​மைத்​தார்.

ஏ.வின்​சென்ட்: ‘நெஞ்​சம் மறப்​ப​தில்லை’ திரைப்​படத்​தில் இவர் பயன்​படுத்​திய கூர்​மையான நிழல்​களும் கதாபாத்​திரங்​களின் மனவோட்​டத்​தைப் பிரதிபலித்த கோணங்​களும் கருப்பு-வெள்ளை ஒளிப்​ப​திவை உணர்ச்​சி​யின் உச்​சத்​துக்​குக் கொண்டு சென்​றன. ஒளியை ஒரு கதாபாத்​திர​மாகவே மாற்​றிய பெருமை இவருக்கு உண்டு.

வேதி​யியல் எழுதிய இலக்​கணம்

அன்​றைய ஃபிலிம் ஸ்​டாக்​கு​கள் (Orthochromatic & early Panchromatic) மிகக் குறைந்த உணர்​திறன் (Low ASA) கொண்​டவை. இத​னால் பிரம்​மாண்​ட​மான ‘கார்​பன் ஆர்க்’ விளக்​கு​கள் தேவைப்​பட்​டன. நடிகர்​களின் ஒப்​பனைகளும் மனிதக் கண்​களுக்​காக அல்​லாமல், ஃபிலிம் கெமிஸ்ட்​ரிக்​காக வடிவ​மைக்​கப்​பட்​டன.

உதா​ரணத்​துக்கு, சிவப்பு நிறம் இருண்ட கருப்​பாகப் பதிவு​பெறும் என்​ப​தால், நடிகர்களுக்​குப் பச்சை அல்​லது நீல நிற லிப்​ஸ்​டிக் பூசப்​பட்​டது; அப்​போது​தான் திரையில் அது இயல்​பான உதடுகளின் சாம்​பல் நிறத்​தில் (Mid Grey Tone) தோன்​றும்!

கருப்பு–வெள்​ளை​யின் பாடம்: நிறம் இல்​லாத​போதே, ஒளி​யின் திசையும் நிழலின் அடர்த்​தி​யும் ஒரு கதையின் முழு உணர்ச்​சி​யையும் சுமக்க முடியும் என்​பதை வின்​சென்ட் போன்ற மாஸ்டர்கள் நிரூபித்​தார்​கள்.

வண்​ணத்​தின் வருகை - மார்​கஸ் பார்ட்​லேயும் ‘செம்மீன்’ தந்த காட்சி அதிர்​வும்: டெக்​னிகலர் (Technicolor) மற்​றும் ஈஸ்ட்​மன்​கலர் (Eastmancolor) போன்ற வண்ண ஃபிலிம் முறைகள் வந்​த​போது, வண்​ணத்தை எப்​படிப் பயன்​படுத்​து​வது என்​ப​தில் ஒளிப்​ப​திவாளர்​களுக்​குப் பெரும் குழப்​பம் இருந்​தது.

‘செம்​மீன்’ படத்​தில், அரபிக்​கடலின் பிரம்​மாண்​டத்​தையும், அலைகளின் கொந்​தளிப்​பையும், பொன்​னிற மாலை ஒளியையும், மீனவ மக்​களின் வாழ்​வியலை​யும் அவர் பட​மாக்​கிய விதம் உல​கத் தரம் வாய்ந்​தது. கடலின் நீலத்​துக்​கும், மாலை​யின் மஞ்​சள்/சிவப்பு வானத்​துக்​கும் இடையே மனித உணர்​வு​களை வண்​ணங்​களின் சமநிலை​யால் பிணைத்​தார் மார்​கஸ் பார்ட்லே.

ஃபிலிம் ஸ்​டாக்​கு​களின் பரிணா​மம்: ஆர்வோ (ORWO) முதல் கோடக் / ஃபியுஜி (Fuji) ஹை ஸ்​பீட் வரை வண்ண சினிமா வளர்ந்​த​போது, அதைத் தாங்​கிப்​பி​டித்த ஃபிலிம் ரோல்​களின் வேதியியலிலும் பெரிய புரட்​சிகள் வெடித்​தன. கிழக்கு ஜெர்மனியில் தயாரிக்​கப்​பட்ட ஆர்வோ (Original Wolfen) ஃபிலிம் ஸ்​டாக்​கு​கள், 60- முதல் 80-கள் வரை இந்​திய சினிமாவில் மிகப்​பெரிய தாக்​கத்தை ஏற்​படுத்​தின.

கோடாக்கை விடக் குறைவான விலை​யில் கிடைத்​ததால், பல பிராந்​திய மொழித் திரைப்​படங்​கள் ஆர்வோ ஃபிலிமையே நம்​பி​யிருந்​தன. இந்த ஃபிலிம் ஸ்​டாக்​கு​களுக்கு என்று தனித்​து​வ​மான குளிர்ந்த டோன் மற்​றும் அடர்த்​தி​யான கான்ட்​ராஸ்ட் இருந்​தது. இது த்​ரில்​லர் மற்​றும் தத்துவார்த்​தப் படங்​களுக்கு ஏற்ற காட்சி அமைப்​பைக் கொடுத்​தது.

கோடக் மற்​றும் ஃபியுஜி ஹை ஸ்​பீட் ஃபிலிம்​கள்: சாஃப்ட் டோன்​களும் இயற்கை ஒளி​யும் 80-களின் இறுதி மற்​றும் 90-களில் கோடக் (5293, 5298) மற்​றும் ஃபியுஜி நிறு​வனங்​கள் அறி​முகப்​படுத்​திய ஹை ஸ்​பீட் ஃபிலிம் ஸ்​டாக்ஸ் (500 ASA / ISO) ஒளிப்​ப​தி​வில் புதிய கதவைத் திறந்​தன.

லைட்​டிங் சுதந்​திரம்: குறைந்த ஒளி​யிலும் பதிவு செய்​யும் திறன் வந்​ததால், பிரம்​மாண்​ட​மான ஸ்டூடியோ விளக்​கு​களின் தேவை குறைந்​தது.

சாஃப்ட் டோனல் இம்ப்​ரூமென்ட்: ஹை-ஸ்​பீடு ஃபிலிம்​கள் ஒளியின் கடினத் தன்​மையைக் குறைத்து, முகங்​களில் மென்மையான நிழல்​களை​யும், பரவலான வெளிச்​சத்​தையும் உரு​வாக்க உதவின.

இயற்கை வெளிச்​சம்: மெழுகு​வர்த்தி வெளிச்​சம், தெரு​விளக்​குகள் மற்​றும் ஜன்​னல் வழியே வரும் இயற்கை ஒளி​யிலேயே படம்​பி​டிக்​கும் சுதந்​திரம் கிடைத்​தது.

அகலத்​திரை​யும் 70 எம்எம்.மும்: ஃபிரேம் பெரிதானபோது பிறந்த நெகடிவ் ஸ்​பேஸ் 50-களில் தொலைக்​காட்​சிப் பெட்​டிகளின் வருகை அதி​கரித்​த​போது, மக்​களைத் திரையரங்​குக்கு ஈர்க்க சினிமா தன் திரையின் அளவைப் பெரிதாக்​கியது. 4:3 (1.33:1) என்ற சதுர வடி​வில் இருந்து, சினிமாஸ்​கோப், விஸ்டாவிஷன், Todd-AO போன்ற பெரிய திரை (2.39:1) விகிதங்​கள் உரு​வெடுத்​தன.

இடைவெளி​யும் கதை சொல்​லும்

அகலத்​திரை வந்​ததும், ஒளிப்​ப​திவாளரால் ஒரு கதாபாத்​திரத்தை மட்​டும் ஃபிரேமின் நடுவில் பூட்டி வைக்க முடிய​வில்லை. கதாபாத்​திரத்​தின் இடப்​புறமும் வலப்​புறமும் இருக்​கும் வெற்​றிடம் கதையின் ஒரு பகுதி​யாக மாறியது.

70 எம்​எம் பிரம்​மாண்​டம்

70 எம்​எம் ஃபிலிம் கேம​ராக்​கள் வந்​த​போது, திரை ஒரு ஜன்​னலாக மாறியது. ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’வில் தொலை​தூர அடிவானத்​தில் சிறு புள்​ளியாகத் தோன்றி, மெது​வாகக் குதிரையில் வரும் மனித​னாக உரு​வெடுக்​கும் காட்சி, 70 எம்​எம் ஃபிலி​மின் பிரம்​மாண்​டத்​தையும் காட்சி வலிமையையும் உணர்த்​திய மறக்க முடி​யாத மைல்​கல்.

ஃபிலிம் காலம்: மனதுக்​குள் உரு​வான எக்ஸ்போசர் டிஜிட்​டல் திரைகளோ, லைவ் மானிட்​டர்​களோ இல்​லாத அந்​தக் காலத்​தில், ஒளிப்​ப​திவாளர் ஒரு கலைஞர் மட்​டுமல்ல; வேதி​யியலை​யும் ஒளியையும் கணக்​கிட்ட ஒரு கலைக் கணித​விய​லா​ளர்.

லேடண்ட் இமேஜ் என்​னும் மாயக் கலை

ஃபிலிம் ரோலில் ஒளி விழும்​போது, அங்கே மறைபிம்​பம் மட்​டுமே உரு​வாகும். ஃபிலிம் லேபில் வேதிப்​பொருட்​களால் கழுவி உரு​வாக்​கப்பட்ட பிறகே அந்தப் பிம்​பம் வெளிப்​படும்.

லைட் மீட்​டர்: ஒளிப்​ப​திவாளரின் கண்​களாக ஸ்​பாட் மீட்​டர் (Spot Meter) மற்​றும் இன்​சிடன்ட் லைட் மீட்​டர் (Incident Light Meter) ஆகியவை செயல்​பட்​டன.

கட்​டுப்​பாடு (Discipline): ஒரு ஃபிலிம் ரோல் 400 அடி அல்​லது 1000 அடி மட்​டுமே கொண்​டிருந்​தது. அதாவது, சுமார் 4 முதல் 10 நிமிடங்​கள் வரைதான் பட​மாக்க முடியும். ஒவ்​வொரு டேக்​கிற்​கும் முன் ஒத்​தி​கையும் துல்​லிய​மான திட்​ட​மிடலும் அவ​சி​ய​மாக இருந்​தன.

அந்​தக் காலத்​தின் எதிர்​பார்ப்பு: பட​மாக்​கிய காட்சி எப்​படிப் பதிவாகியிருக்​கிறது என்​பதை அறிய, அடுத்த நாள் காலை லேப் டெய்​லிஸ் (Lab Dailies) கிடைக்​கும் வரை ஒளிப்​ப​திவாளர் காத்​திருக்க வேண்​டும். அந்​தக் காத்​திருப்​பும், எதிர்​பார்ப்​பும், பொறுப்​புணர்​வும் அவர்​களின் துல்​லியத்தை (Precision) உச்​சத்​துக்​குக் கொண்டு சென்​றன.

ஹெச்​டிஆர் மற்​றும் விர்ச்​சுவல் புரட்சி

இன்று ஹெச்​டிஆர் தொழில்​நுட்​பம் 16+ Stops Dynamic Range வரை பதிவு செய்​கிறது. ஜன்​னலுக்கு வெளியே உள்ள மேகங்​களின் ஹைலைட் டீட்​டெய்​லை​யும் அறை​யின் மூலை நிழல்​களின் ஷேடோ டீட்​டெய்​லை​யும் ஒரே நேரத்​தில் பாது​காக்​கிறது. அன்​ரியல் என்​ஜின் எல்​இடி வால்​யும் (Unreal Engine LED Volume) மூலம், விர்ச்​சுவல் பின்​னணி​யின் ஒளியே, நடிகர்​கள் மீது இயற்​கை​யாகப் பிரதிபலிக்​கிறது. செட்​டிலேயே காட்​சி​யின் முடிவை உணர்ந்து ஒளியை அமைக்க ஒளிப்பதிவாளரால் முடிகிறது.

| முற்றும் |

சி.ஜெ.ராஜ்குமார் (திரைப்பட ஒளிப்பதிவாளர்) cjrdop@gmail.com

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT