நடிகை கவுரி கிஷன்

 
தமிழ் சினிமா

பெண்களின் வாழ்வை மையப்படுத்தும் ‘தாரகை’

நிலா

கவுரி கிஷன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் படத்துக்கு ‘தாரகை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் காளி வெங்கட், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்பீட் ரீல்ஸ் ஸ்டூடியோ தயாரிக்கும் இப்படத்தை க்ரிஷ் எழுதி இயக்குகிறார். சித்து குமார் இசையமைக்கிறார். சுந்தர் சுகுமாரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

“ஒரு பெண்ணின் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், பயணம், உறவுகள், வாழ்க்கைத் தேர்வுகள் மற்றும் சுதந்திரம் குறித்த கேள்விகளை முன்வைக்கும். ஒரு பயணம், ஒரு தேடல், பல பெண்களின் பாதைகள்தான் இதன் கதை” என்று படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT