தமிழ் சினிமா

‘தலைவர் தம்பி தலைமையில்’ வசன சர்ச்சை: ஜீவா விளக்கம்

ஸ்டார்க்கர்

சென்னை: ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வசனம் மூலம் உருவான சர்ச்சைக்கு நடிகர் ஜீவா விளக்கமளித்துள்ளார்.

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் ஒரு காட்சியில் “படிச்சு படிச்சு சொன்னேன்டா.. கண்டிஷன்ஸ் பாலோ பண்ணுங்கடா.. கண்டிஷன்ஸ பாலோ பண்ணுங்கடானு.. கேட்டீங்களா” என்று வசனமொன்றை பேசியிருப்பார் ஜீவா. இந்தக் காட்சிக்கு திரையரங்கில் மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். அதுவே இணையத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் ஜீவா, “டிரெண்டிங் என்ற விஷயத்தை வைத்து தான் அனைத்தும் செய்துக் கொண்டிருக்கிறோம். அந்த இடத்தில் இந்த வசனத்தை பேசினால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் சொன்னார். அதை நானும் பேசினேன், அதற்கு பெரிய வரவேற்பும் கிடைத்துள்ளது. அதை மற்றவர்களின் மனதை புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தின் போது, தமிழக கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழுதுக் கொண்டே பேசிய வீடியோ பதிவொன்று இணையத்தில் வைரலாக பரவியது. அதில் பேசிய வசனத்தைத் தான் ஜீவா ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தில் பேசியிருந்தார். இதனை முன்வைத்து திமுகவை சார்ந்த பலரும் ஜீவாவை இணையத்தில் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT