ரா.வெங்கட் இயக்கத்தில் ஜீவா ஹீரோவாக நடித்துள்ள படம் ‘தகப்பன்’. இதில் நாயகியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். ‘கருடன்’, ‘மாமன்’ படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் சார்பில் குமார் தயாரிக்கிறார்.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம், மனித உணர்வுகளை மையமாக வைத்து உருவாகும் படம் இது.
கிராமத்து மண்வாசனையுடன் உருவாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கெனவே வரவேற்பைப் பெற்ற நிலையில், 40 நாளில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளனர்.
இதன் ஷூட்டிங் மேலூர் பகுதியில் உள்ள மேலவளவு கருப்பு கோயிலில் தொடங்கியது. அதே இடத்திலேயே படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு, கோயிலில் கிடா வெட்டி, அப்பகுதி மக்களுக்கு விருந்து வைத்துள்ளது.