உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தும் சூர்யா முதல் ரசிகர்களின் அன்பை மறக்காத நானியின் நெகிழ்ச்சி வரை இன்றைய திரைத் தெறிப்புகள் இவை.
> முன்பு, வெளிப்படையாகத் தெரியும் தசைகள் மற்றும் அழகான உடலமைப்புக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தேன். இப்போது அப்படியில்லை. எனது உடலின் சீரான இயக்கம், செயல்பாடு, ஆரோக்கியத்தில் தான் அதிக கவனம் செலுத்துகிறேன் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.
> இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் ஆர்.மாதேஷ் இயக்கும் காமெடி கலந்த ரொமான்டிக் படமான ‘சண்டக்காரி’யில் ஸ்ரேயா - விமல் என யாரும் எதிர்பாராத ஒரு கூட்டணி ஜோடி சேர்ந்திருக்கிறது.
> ‘கட்டா குஸ்தி 2’ மூன்றாம் பாகத்திற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் இறுதியாக அந்த வசனத்தை வைத்திருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு. மூன்றாம் பாகத்திலும் நான் இருப்பேன் என்று யோகி பாபு தெரிவித்துள்ளார்.
> கலெக்ஷனைப் பற்றி கவலைப்படாமல் பிவிஆர் குழுமம் ‘வைல்ட் தமிழ்நாடு’ என்ற மாநிலத்தின் அரிய பல்லுயிர் சூழலை காட்சிப்படுத்தியுள்ள வனவிலங்குகள் ஆவணப் படத்தை தனது தியேட்டர்களில் வெளியிடுகிறது.
> சென்னை பார்த்தசாரதி கோயிலில் நடிகை மாளவிகா மோகனன் இன்று சுவாமி தரிசனம் செய்தார். அவரை அடையாளம் கண்டு கொண்ட ரசிகர்கள் போட்டோ, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு.
> சூரியை வைத்து ‘மண்டாடி’ படத்தை இயக்கிய இயக்குநர் மதிமாறன், அடுத்த படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பில் சூர்யாவை வைத்து இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
> முக்கிய பிரமுகர்களிடம் நான் வேலை கேட்டபோது, “நீங்கள் மத்திய அமைச்சராக இருந்தவர் அல்லவா” என்றனர். மீண்டும் நான் சின்னத் திரைக்குள் வருவதில் எந்தத் தவறும் இல்லை என்று நினைக்கிறேன் என்று அவர்களை சமாதானம் செய்தேன் என்று மீண்டும் நடிக்க வந்திருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
> ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ 3-ம் பாகம் செப்.18-ல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. இதில், ராதிகா ஆப்தே, கொங்கோனா சென் சர்மா, அதிதி ராவ் ஹைதாரி, ராதிகா மதன், சனா தம்பி, விஜய் வர்மா, அபிஷேக் பானர்ஜி, சித்தார்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
> என் மகனைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பிக்பாஸ் சீசன் 10 வாய்ப்பை நிராகரித்துவிட்டேன். என்னைப் பொறுத்தவரை குழந்தைக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன் என்று ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
> உங்கள் அன்பை ஒருபோதும் நான் சாதாரணமாக எடுத்துக் கொண்டதில்லை. இனியும் எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று திரைத் துறையில் இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் தயாரிப்பாளரும் நடிகருமான நானி பதிவு.