தமிழ் சினிமா

“ரீல்ஸ் மூலம் எதையும் கற்றுக்கொள்ள முடியாது” - நடிகர் சூர்யா கருத்து

நிலா

நடிகர் சிவகு​மார் கல்வி அறக்​கட்​டளை யின் 47-வது ஆண்டு விழா அகரம் பவுண்​டேஷன் அலு​வல​கத்​தில் நடந்​தது. கல்​லூரி​யில் சேர்ந்​துள்ள 25 மாணவ, மாணவி​களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் கல்வி ஊக்​கத் தொகை​யாக வழங்​கப்​பட்​டது.

மூத்த ஓவியர் ஜீவானந்​தனுக்கு ரூ.1 லட்​சம் பொற்​கிழி​யுடன் விருது வழங்கி கவுரவிக்​கப்​பட்​டது. திண்​டிவனம் தாய் தமிழ்ப் பள்​ளி​யில் பணி​யாற்​றும் ஆசிரியர்​களின் மாத சம்பள பங்​களிப்​புக்​காக ரூ.6,28,000 மற்​றும் ஈரோடு சுடர் என்ற அமைப்​புக்கு ரூ.2 லட்​சம் மற்​றும் வாழை என்ற அமைப்​புக்கு ரூ.3 லட்​சம் நிதி​யுதவி வழங்​கப்​பட்​டது.

இந்​நிகழ்ச்​சி​யில் நடிகர் சிவகு​மார், மாணவ, மாண​வியர், அகரம் ஃபவுண்​டேஷன் தன்​னார்​வலர்​கள் மற்​றும் சமூக ஆர்​வலர்​கள் என பலரும் கலந்​து​கொண்​டனர்.

பிறகு சூர்யா பேசும்​போது, “அகரம் தொடங்கி 20 வருஷம் கடந்​தாச்​சு. கிட்​டத்​தட்ட முதல் தலை​முறை மாணவர்​கள், மாணவி​களோட குடும்​பத்​துல ஒரு 7 ஆயிரம் பேரை எங்​களால வந்து தொட முடிஞ்​சிருக்​கு. இன்​னும் பல விஷ​யங்​கள் அகரம் மூலமா நடந்​துகிட்டே இருக்​கு. நாம முன்​னேறி வாழ்க்​கை​யில மேல வந்​துட்​டா, வெறும் ரீல்ஸை மட்​டும் பார்க்​காம, அக்​கம் பக்​கத்​துல யார் இருந்​திருக்​காங்க?

நம்ம இங்க வர்​றதுக்கு யார் உதவியா வந்​திருக்​காங்க? நமக்கு யார் இந்த அடை​யாளத்​தைக் கொடுத்​திருக்​காங்க அப்​படிங்​கிறவங்​களை மறந்​துட வேண்​டாம். அதே மாதிரி ஒரு இடத்​துக்கு வந்​ததுக்கு அப்​புற​மா, நம்ம ஒருத்​தரை​யா​வது மேல உயர்த்​தணும். அவங்​களோட கிரெடிட்ல வந்து நம்ம பெயர் இருக்​கணும்.

நீங்க இன்​ஸ்​டாகி​ராம், அதாவது ரீல்ஸ் பார்த்​துட்டு இருந்​தீங்​கன்​னா, அந்த ரீல்​ஸ்ங்​கிறது ஒரு கதை​தான். அதனால நாம எதை​ யும் கத்​துக்க போறதே கிடை​யாது. யாரை ஃபாலோ பண்​றோம் அப்​படிங்​கிறது ரொம்ப முக்​கி​யம். கனவு உலகமா பார்த்​துட்டு இருந்​தீங்​கன்​னா, அந்த கனவு உலகத்​துலயே தான் நாம இருப்​போம். எலான் மாஸ்க் எங்​கிருந்து ஆரம்​பிச்​சா​ரு? 24 மணி நேரத்​துல 23 மணி நேரம் வேலை செய்​வா​ராம்.

ஒரு மணி நேரம் தான் வந்து தூங்​கு​வா​ராம். அந்த மாதிரி எங்​கிருந்து ஆரம்​பிச்​சு, இந்த இடத்​துக்கு வந்​திருக்​காங்க, அப்​படிங்​கிறதை வெறும் ரீல்ஸ் மட்​டும் பார்க்​காம, நிறைய பாட்​காஸ்ட் இருக்​கும், அதுல அவங்​களை பத்​தின நிறைய ரிசர்ச் வொர்க் இருக்​கும், அதெல்​லாம் எடுத்​துக்​கிட்​டீங்​கன்​​னா, உங்​களுக்​கு ரொம்​ப உதவி​யா இருக்​கும்​. உங்​களுக்​குள்​ள இருக்​கிற திறமை​யை வெளி​யில எடுத்​துட்​டு வர்​றதுக்​கு அவை உதவும்” என்​றார்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT