சூர்யா நடித்து இந்தாண்டு வெளியான ‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ஆகிய திரைப்படங்கள் வரவேற்பைப் பெற்றன. ஜித்து மாதவன் இயக்கத்தில் சீன் என்ற படத்தில் நடித்துள்ளார். தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், தனது நற்பணி இயக்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், 25 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் ரசிகர்களைச் சந்தித்தார்.
தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் சூர்யா சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. அதில், “அன்பை மட்டுமே விதைப்போம். சமூக ஊடகங்களில் ஒரு முட்டாள் ஒரு பதிவைப் போட்டதற்காக, பதிலுக்குப் பேச ஆரம்பித்தால் நாமும் முட்டாளாகி விடுவோம். நாம் நாமாகவே இருப்போம். அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும். நாம் எதுவும் பேசத் தேவையில்லை. அவர்களுக்குப் புரிய வைக்கவேண்டும். அவர்களை மாற்ற வேண்டும் என்று முயற்சி செய்தால் கஷ்டம்தான். உங்கள் சக்தியை அதற்காக வீணடிக்க வேண்டாம். உங்களுக்குப் பிடித்ததைத் தினமும் செய்யுங்கள். நிச்சயமாக வெற்றி கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.