தமிழ் சினிமா

‘சூர்யா 47’ படப்​பிடிப்பு நிறைவு

நிலா

நடிகர் சூர்யாவின் 47-வது படத்தை ‘ஆவேஷம்’ என்ற மலை​யாளப் படத்தை இயக்​கிய ஜீத்து மாதவன் இயக்​கி​யுள்​ளார். இதில் சூர்யா, போலீஸ் அதி​காரி​யாக நடித்​துள்​ளார். பிரேமலு நஸ்லென், நஸ்ரியா, ஜான்​விஜய், ஆனந்​த​ராஜ் உள்பட பலர் நடித்​துள்​ளனர். சூர்​யா​வும் ஜோதி​கா​வும் இணைந்து ழகரம் ஸ்டூடியோஸ் நிறுவனத்​தின் சார்​பில் இதை தயாரித்​துள்​ளனர்.

ஆக் ஷன்​-​காமெடி படமான இதன் படப்​பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இப்​படத்​தின் தலைப்பு மற்​றும் முதல் தோற்ற போஸ்டர் விரை​வில் வெளி​யிடப்​படும்​ என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, தெலுங்​கு இயக்​குநர்​ வெங்​கி அட்​லூரி இயக்​கும்​ ‘விஸ்​வ​நாத் அண்ட்​ சன்​ஸ்’ படத்​தில்​ நடித்​து முடித்​துள்​ளார்​ சூர்​யா. அதில்​ மமி​தா பைஜு ​நாயகி​யாக நடித்துள்ளார்​.

SCROLL FOR NEXT