தமிழ் சினிமா

மீண்டும் இணையும் ‘சூப்பர் டீலக்ஸ்’ கூட்டணி?

ஸ்டார்க்கர்

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க புதிய படமொன்று தொடங்கப்பட இருக்கிறது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. இப்படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினையும் வென்றார் விஜய் சேதுபதி. அதற்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா எந்தவொரு படத்தினையும் இயக்காமல் உள்ளார்.

தற்போது தனது அடுத்த படத்துக்காக தயாராகி வருகிறார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. இதில் நாயகனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதில் ஃபகத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதன் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் அனைத்துமே இன்னும் 10 நாட்களில் முடிவாகிவிடும் என்கிறார்கள் திரையுலகினர்.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இதன் படப்பிடிப்பு தொடங்க படக்குழு முடிவெடுத்துள்ளது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்கும் அளவுக்கு திரைக்கதையை அமைத்திருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. ஆகையால் அவரது இயக்கத்தில் குறுகிய காலத்தில் உருவான படமாக இது இருக்கும் என்கிறார்கள்.

SCROLL FOR NEXT