தமிழ் சினிமா

‘லவ் இங்க்’-கில் வில்லன் ஆனார் சுனில் ரெட்டி

நிலா

ராஜ் அய்​யப்பா, டெல்னா டேவிஸ் முதன்மை வேடங்​களில் நடிக்​கும் திரைப்​படம், ‘லவ் இங்க்’. இதில் ஆர்த்தி, ரவி மரியா, மைம் கோபி, பட்​டிமன்​றம் ராஜா, ரமா, சுபாஷினி, வினோத் முன்னா உள்​ளிட்ட பலர் முக்​கிய கதாபாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். மேக​ராஜ் தாஸ் இயக்​கும் இப்​படத்தை எம்​ஆர் பிக்​சர்ஸ் ஏ.மகேந்​திரன் ஆதி​கேசவன் வழங்​கு​கிறார்.

தரண் குமார் இசையமைக்​கும் இப்​படத்​துக்கு ஐ.மருதநாயகம் ஒளிப்​ப​திவு செய்​கிறார். “இன்​றைய தலைமுறை​யின் சமகால உறவு​களை மைய​மாகக் கொண்டு உரு​வாகும் இந்​தப் படம், நவீன காதலை நகைச்​சுவையுடன் சொல்​கிறது. இளைஞர்​களை மட்​டுமல்​லாமல், குடும்​பத்​துடன் ரசித்து, கொண்​டாடக்​கூடிய பட​மாகவும் இருக்​கும். பெரும்​பாலான படங்​களில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்​துள்ள சுனில் ரெட்டி இதில் வில்​லனாக நடித்​துள்​ளார். இறுதிக்​கட்​டப் படப்​பி​டிப்பு நடை​பெற்று வரு​கிறது. டிசம்​பரில் வெளியாகவுள்​ளது” என்​றார் இயக்​குநர் மேக​ராஜ் தாஸ்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT