தமிழ் சினிமா

ரஜினியுடன் நடந்த கதை விவாதம்: அஸ்வத் மாரிமுத்து விவரிப்பு

ஸ்டார்க்கர்

ரஜினியுடன் நடந்த கதை விவாதம் தொடர்பாக அஸ்வத் மாரிமுத்து பேட்டியொன்றில் பேசியிருக்கிறார்.

ரஜினியின் அடுத்த படத்தினை சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘ரஜினி173’ படத்துக்காக பல்வேறு இயக்குநர்கள் ரஜினியிடம் கதைகள் கூறினார்கள். அந்தப் பட்டியலில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவும் இருந்தார்.

          

தற்போது ரஜினி படத்துக்காக கதை சொன்ன போது என்ன நடந்தது என்பதை அஸ்வத் மாரிமுத்து பேட்டியொன்றில் விவரித்துள்ளார். அப்பேட்டியில் அஸ்வத் மாரிமுத்து, “சிம்பு படத்துக்காக கதை எழுதிக் கொண்டிருந்த போது, ஒரு கட்டத்தில் கதையை நகர்த்த முடியாமல் நின்றது. அப்போது வேறொரு திரைக்கதையில் பணிபுரிய தொடங்கினேன். அப்போது தான் கமல் சார் நிறுவனம் மூலமாக ரஜினி சார் நடிக்கும் படத்திற்கான கதை குறித்து பேசினார்கள்.

ரஜினி சாரை சந்தித்து கதையைக் கூறினேன். அவர் இடைவேளை வரை கேட்டுவிட்டு முழுமையாக ஒன்றிவிட்டார். மதிய உணவு சாப்பிடுவதை மறந்து இருவரும் 2 மணி நேரம் வரை பேசினோம். இந்த திரைக்கதை மிகவும் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், வில்லன் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்றெல்லாம் விவாதித்தார். அப்படம் கிட்டதட்ட உறுதியான நிலையில், சில சூழ்நிலைகளால் கைகூடவில்லை. ஆனால், அந்தக் கதையினை ரஜினி சார் அல்லது கமல் சாருடன் இணைந்து உருவாக்குவேன். ‘டிராகன்’ படத்துக்குப் பின் ரஜினி சாரை 4 முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் அஸ்வத் மாரிமுத்து.

SCROLL FOR NEXT