எதிர்நீச்சல் படத்தில்...

 
தமிழ் சினிமா

சவு​கார் ஜானகி நினைவலை: இதற்கு மேல் என்ன எதிர்பார்க்க முடியும்?

நிலா

சினிமா தொடங்​கிய காலம் முதல் கதா​நாயகர்​களின் ஆதிக்கமுள்ள துறை​யாக இருந்து வரும் நிலை​யில், அவர்​களுக்கு இணை​யான வாய்ப்​பு​களும் இடமும் நாயகி​களுக்கு கிடைப்​பது எளி​தானதல்ல. அதை​யும் மீறி சில நடிகைகள் அழுத்​த​மான பாத்திரங்​களில் நடித்து பார்​வை​யாளர்​களின் மனதில் அழி​யாத இடத்​தைப் பிடித்​திருக்​கிறார்​கள். பானு​ம​தி, பத்​மினி, ஜெயலலிதா என தொடரும் வரிசை​யில் மறக்க முடி​யாத பெயர், சவு​கார் ஜானகி.

பரி​தாபத்தை வரவழைக்​கும் கதா​பாத்​திரங்​களில் அவர் இயல்​பாக பொருந்​தி​விடு​வ​தால் அது​போன்ற படங்​கள் அதி​கம் கிடைத்​தன. பாக்​கியலட்​சுமி, குமுதம், படிக்​காத மேதை, பார் மகளே பார், காவி​யத் தலை​வி, ஒளி விளக்கு போன்ற படங்​களில் அவர் சோக​மான கதா​பாத்​திரங்​களில் நடித்து பார்​வை​யாளர்​களைக் கண்​ணீர் விட வைத்​தார். ‘எதிர்​நீச்​சல்’, ‘பாமா விஜ​யம்’ ஆகிய படங்​களுக்கு பிறகு அவரை பற்​றிய ‘சோக கதா​பாத்​திர’ பேச்சு மாறியது.

அதே​போல், புதிய பறவை, உயர்ந்த மனிதன் போன்ற படங்​களில் மிடுக்​கான தோரணை, ஸ்டைலிஷான நடிப்​பின் மூலம் தன்​னால் எந்த மாதிரி​யான பாத்​திரத்​தி​லும் ஜொலிக்க முடி​யும் என நிரூபித்​தார். ‘இரு கோடு​கள்’ படத்​தில் மாவட்ட ஆட்​சி​ய​ராக, ஆளு​மை​யான தோற்​றத்​தில் வந்து மிரட்​டி​னார். மற்​றொரு பக்​கம் பாமா விஜ​யம், தில்​லு​முல்லு உள்​ளிட்ட படங்​களில் நகைச்​சுவை​யிலும் கலக்​கி​யிருப்​பார்.

பாலும் பழமும், மோட்​டார் சுந்​தரம் பிள்​ளை, பணம் படைத்​தவன் போன்ற படங்​களில் அவரது கதா​பாத்​திரங்​கள் ரசிகர்​களால் மிக​வும் ரசிக்​கப்​பட்​டன. சில சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்​திருக்​கிறார். சில வருடங்​களுக்கு முன் அவர் அளித்த பேட்டி ஒன்​றில், “என்னை சினி​மாவுக்கு அழைத்து வந்​தது மகிழ்ச்​சி​யான தற்​செயல்.

சினிமா எனக்கு புகழை​யும், பொருளா​தா​ரத்​தை​யும் மனநிறைவை​யும் கொடுத்​திருக்​கிறது. இதற்கு மேல் ஒரு​வர் என்ன எதிர்​பார்க்க முடி​யும்?” என்று மனநிறைவுடன் கூறி​யிருந்த ஜானகி, கதா​நாயகி​யாக நடிக்க ஆரம்ப காலத்​தில் பல்​வேறு போராட்​டத்​தைச் சந்​தித்திருக்​கிறார்.

“அந்​தக் காலத்​தில் கதா​நாயகி​கள் குண்​டாக​வும் நல்ல உடல்​வாகுட​னும் இருக்க வேண்​டும் என்று எதிர்​பார்த்​தார்​கள். நாயகி​யாக நடிப்​ப​தற்​குத் தேவை​யான உயர​மும், தோற்​ற​மும்இல்லை என்று என்​னிடமே சொன்​னார்​கள். பிறகு வாய்ப்​பு​கள் வந்​தன. துன்​பப்​படும் மனை​வி, கைவிடப்​பட்ட காதலி போன்ற கதா​பாத்​திரங்​களே ஆரம்​பத்​தில் கிடைத்​தன.

எனது முகம் அப்​படிப்​பட்ட கதா​பாத்​திரங்​களுக்​குத்​தான் பொருத்​த​மாகத் தெரிந்​திருக்​கலாம். யாருக்​குத் தெரி​யும்? அப்​படி நடிப்​ப​தில் எனக்​கும் சலிப்பு ஏற்​பட்​டது. ஆனால்​ அதற்​காக வருத்​தப்​பட​வில்​லை. எனக்​கு புகழும்​ பணமும்​ தேவைப்​பட்​ட காலத்​தில்​, இரண்​டை​யுமே அந்​தக்​ கதா​பாத்​திரங்​கள்​ எனக்​குக்​ கொடுத்​தன” என்​று தெரிவித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT