தமிழ் சினிமா

‘ரஜினியை மீண்டும் இயக்குகிறேனா?’ - சவுந்தர்யா ரஜினிகாந்த் நேர்காணல்

செ. ஏக்நாத்ராஜ்

“நான் நிறைய வெப் சீரிஸ் பார்ப்​பேன்; மக்​கள் விரும்​புற, அவங்க தங்​களோட தொடர்பு படுத்​திப் பார்த்​துக்​கிற மாதிரி​யான கதைகளைச் சொல்​லணும்னு எனக்கு ஆசை உண்​டு. காதல் கதைகள் பண்​ணணும்ங்கற ஆசை​யும் அதி​கம். ஏன்​னா, காதல் சொல்​லிக் கொடுத்து வர்​ற​தில்​லை. அது இயல்பா மனசுக்​குள்ள இருந்து வெளிப்​படற விஷ​யம். அப்​படி ஒரு காதலை சொல்​றது​தான் ‘#லவ்’ வெப் சீரிஸ். நான் தயாரிச்ச ‘வித் லவ்’ பள்​ளிக்​காதலைத் திரும்​பிப் பார்க்க வச்​சது; இந்த ‘#லவ்’ வெப்​தொடரும் வேற ஒரு விஷ​யத்தை பார்​வை​யாளர்​களுக்கு உணர வைக்​கும்னு நம்​பறேன்” என்​கிறார், சவுந்​தர்யா ரஜினி​காந்த்.

நெட்​பிளிக்​ஸில் வெளி​யாகி இருக்​கிற இந்த #லவ் தொடரில் அர்​ஜுன் தாஸ், ஐஸ்​வர்யா லட்​சுமி முதன்மை கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். பாலாஜி மோகன் இயக்கி இருக்​கிறார். தயாரிப்​பாளர் சவுந்​தர்யா ரஜினி​காந்​திடம் பேசினோம்.

இந்த ‘#லவ்’ வெப் தொடருக்கு நீங்​க​தான் ஷோ-ரன்​னர், கதை தேர்​வில் இருந்து எல்​லாத்​துல​யும் நீங்க இருந்​திருக்​கீங்க. இந்த தொடர்ல உங்​களை ஈர்த்த விஷ​யம்னு எதை சொல்​லு​வீங்க?

நான் காதலை ஆழமா நம்​புறேன். காதலை மையமா வச்சு நிறைய கதைகள் வந்​துட்டே தான் இருக்​கு. அது ஒரு முடி​வில்​லாத உணர்​வு. அது நேர்க்​கோடு இல்​லை, சில நேரம் ரொம்ப சிக்​கலானது, அது சிக்​கலா இருந்​தா​லும் இந்த கதை​யில வர்ற இரண்டு முக்​கிய கதா​பாத்​திரங்​களான மேத்யூ (அர்​ஜுன் தாஸ்), தாராவோட (ஐஸ்​வர்யா லட்​சுமி) காதல் கதை தவிர, மற்ற சில கதைகளும் இருக்​கு. அதனால​தான் #லவ்​-னு டைட்​டில் வச்​சோம். நானும் ஸ்கிரிப்ட் ரைட்​டர் நிர்​மலும் இந்த தொடருக்​கான கதையை எழுத ஆரம்​பிக்​கும் போதே, இந்த கதா​பாத்​திரங்​கள், எல்​லோரும் ஏத்​துக்கற மாதிரி இருக்​கணும்னு நினைச்​சோம். அது​மா​திரி அமைஞ்​சது.

இந்த டைட்​டில்ல ‘லவ்​’-க்கு முன்​னால ‘ஹேஷ்டேக்’ இருக்​கே, ஏன்?

‘ஹேஷ்டேக்’ அப்​படிங்​கறது இப்ப வெறும் சிம்​பல் இல்​லை. அது ஒரு அடை​யாளமாகவே மாறிடுச்​சு. ஹேஷ்டேக் அப்​படிங்​கறது ஜென்-ஸி வார்த்​தை. அது எவ்​வளவு மாடர்னா இருந்​தா​லும் காதல் அப்​படிங்கற உணர்வு காலத்தை கடந்​தது. இன்​றைய தலை​முறை​யினருக்​கு, இன்​றைய கால​கட்​டத்து மொழி​யில சொல்​லணுங்​கறதுக்​காக அப்​படி தலைப்பு வச்​சோம்.

ஜென்​-ஸிக்​கான காதல்​தான் கதை​யா?

நான் வளரும்​போது காதல் மாதிரி​யான உறவு​களை வெளிப்​படையா குடும்​பங்​கள்ல பேச முடி​யாது. இதை பத்தி எப்​படி பேசறது, சொல்​றது, அப்​படிங்கற தயக்​கம் இருந்த காலம் அது. சமூக ஊடகங்​கள் வளர்ந்​திருக்​கிற இந்​தக் கால​கட்​டத்​துல எதுக்​கும் தடை​யில்​லை, தயக்​கம் இல்​லை. எதை​யும் எளிமையா சொல்ல முடி​யுது, பேச முடி​யுது. இதை பரிணாம வளர்ச்​சின்​னும் சொல்​லலாம். இந்த #லவ் தொடர்ல பல்​வேறு வித​மான, பலதரப்​பட்ட காதல்​களைச் சொல்​லி​யிருக்​கோம். இதுல ஜென்- ஸி இளைஞர்​கள் கனெக்ட் ஆவாங்​கன்னு நினைக்​கிறேன்.

ஒரு த்ரில்​லர் அல்​லது க்ரைம் மாதிரி​யான வெப்​தொடர்​கள்ல ஒவ்​வொரு எபிசோடு முடி​யும்​போது, ஒரு சஸ்​பென்ஸ் இருக்​கும். அது அடுத்த எபிசோடை பார்க்​கறதுக்கு இழுக்​கும். காதல் கதை​யில அப்​படி என்ன இருக்​கும்?

இதுல​யும் இருக்​கு. அதுக்​காகவே எடிட்​டிங் இதுக்கு பெரிய சவாலா இருந்​தது. ஒவ்​வொரு எபிசோடு முடி​யும் போதும் அடுத்து என்ன என்​கிற ஆர்​வத்​தைத் தூண்​டுறது​தான் இதுல முக்​கிய சவால். ‘நான்- லீனிய​ரா’க இருந்தா கூட அந்த எதிர்​பார்ப்பு ஒவ்​வொரு எபிசோடு முடிவுல​யும் இருக்​கும். கதை எழுதும்​போது அது முக்​கி​யம்னு முடிவு பண்ணிதான் எழுத ஆரம்​பிச்​சோம்.

இயக்​குநர் பாலாஜி மோகனை எப்​படி இதுக்​குள்ள கொண்டு வந்​தீங்க?

திரைப்​படமா இருந்​தா​லும் சரி, வெப் சீரிஸா இருந்​தா​லும் சரி, டீம் அமையறதும் அமைக்​கிறதும் ரொம்ப முக்​கி​யம். நானும் என் எழுத்​தாளர்​களும் இந்​தக் கதையை ரெடி பண்​ணிட்​டு, யாரை டீமுக்​குள்ள கொண்டு வரலாம்னு யோசிப்ப, இதை இயக்​கறதுக்கு பாலாஜி மோகன்​தான் சரி​யான நபர்னு முடிவு பண்​ணினோம்.

காதல் ஜானரை அவர் நல்லா இயக்​கு​வார்னு நம்​பினோம். சில இயக்​குநர்​கள், சில ஜானர் படங்​களை சிறப்பா இயக்​கு​வாங்க. அது​போல பாலாஜி மோக​னுக்கு காதல் கதைகள் நல்லா வரும்னு அழுத்​தமா நம்​பினேன். அப்​படித்​தான் அவரை தேர்வு செய்​தோம்.

அப்பா ரஜினி​காந்தை வச்சு ‘கோச்​சடை​யான்’ பண்​ணி​யிருக்​கீங்​க...

அது என் வாழ்​நாள் முழு​மைக்​கு​மான படம். அந்த முயற்சி ஒரு மைல்​ஸ்​டோன். ‘கோச்​சடை​யான்’ படம் இப்பவரை என்​னோட அடை​யாள​மாகவே இருக்​குது. அதுல எனக்கு பெரு​மை​யாக​வும் இருக்​கு. ஏன்​னா, இன்​னைக்கு அனிமேஷன், மோஷன் கேப்​சர் தொழில்​நுட்​பம் பற்றி எல்​லோருக்​கும் தெரி​யுது. நான் பண்​ணும்​போது அது புதுசு. யாருக்​கும் புரி​யாத விஷ​யம்.

இப்போ அந்தடெக்​னாலஜியை நிறைய பேர் பயன்​படுத்​தறாங்​கன்னு நினைக்​கும் போதே சந்​தோஷமா இருக்​கு. அடுத்​து அப்பா கூட படம் பண்ற வாய்ப்பு கிடைக்​கு​மான்னு தெரி​யாது. கிடைச்சா அது கடவுளின் அருளாக​வும் அப்​பா​வின் ஆசீர்​வாத​மாக​வும் இருக்​கும். இப்ப சில படங்​களும் வெப் தொடரும் தயாரிக்​கிற பணி​கள் போயிட்​டிருக்​கு. நான் இயக்​கப் போற படத்​துக்​கான ஸ்கிரிப்ட் வேலைகளும் நடந்​துட்டு இருக்​கு.

SCROLL FOR NEXT